ஆ - வரிசை 65 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஆரதக்கறி

சைவ உணவு

ஆராலை ஏலும்

யாராலும் ஏலும், தன்னால் முடியாது என்ற குறிப்பு, ஒருவராலும் முடியாது என்ற குறிப்பு

ஆறிட்டப் போறது

யாரிடம் செல்வது, என்னிடம் அவ்வளவு பணம் இல்லை அதை உதவக் கூடியவர்கள் எவருமில்லை என்ற குறிப்பு

ஆரிட்டை

யாரிடம்

ஆரு

யார்

ஆரு கண்டது

யார் எதிர்பார்த்தது எவரும் எதிர்பார்க்கவில்லை என்ற குறிப்பு

ஆருதாறது

எவரும் தருவதிற்கில்லை என்ற குறிப்பு, அனாவசியமாக மேற்கொள்ளப்படும் தவிர்க்கக்கூடிய செலவு என்ற கருத்து

ஆருவீட்ட போறது

யார் வீட்டிற்கு போவது?

ஆரெண்டு

யார் என்று

ஆரேன்

யாராவது எவரேனும்

ஆரைப் பிடிக்கிறது

குறிப்பிட்ட செயல் ஒன்றை ஆற்றுவதற்கு எவரின் உதவியை நாடுவது என்ற கேள்வி அல்லது குழப்பநிலை, ஒன்றை மீளப்பெறுவதற்கு எவரும் இருக்க போவதில்லை என்ற கருத்து

ஆலங்காய்ப் புட்டு

அரிசிமா, உளுத்தம் மா, சக்கரை முதலியன சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு வகை பிட்டு

ஆலாத்தியெடுத்தல்

ஆரத்தி எடுத்தல்

ஆவி பறிதல்

மரணித்தல்

ஆவுரிஞ்சுக்கல்

மாடுகள் தமது உடலில் உள்ள உண்ணி, கடி முதலியவற்றை உரஞ்சி போக்குவதற்று அமைக்கப்பட்டிருக்கும் சொரசொரப்பான கற்தூண்

ஆழநீளம்

ஒன்றை அல்லது ஒருவரைப் பற்றிய சரியான விபரங்கள்

ஆழமறிதல்

ஒரு விடயம் தொடர்பில் மற்றொருவரின் நிலைப்பாட்டை தெரிந்து கொள்ளல்

ஆள் அவுட்

ஒருவர் இறந்து விட்டார் என்ற குறிப்பிடும் ஒரு முறை, ஒருவர் விளையாட்டில் தோல்வியடைந்து விட்டார் என்ற குறிப்பு

ஆள்காட்டி

ஆட்களைக் கண்டவுடன் ஒலி எழுப்புவதாகக் கருதப்படும் இரவில் பறக்கும் ஒருவகை பறவை

ஆள்காட்டுதல்

பொருத்தமற்ற முறையில் மற்றவர்களிற்கு தம்மை காட்டிக் கொள்ளுதல்