ஆ - வரிசை 64 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஆத்தாக் கொடுமை

தவிர்க்க முடியாத நெருக்கடி நிலைமை

ஆத்தாக்போக்கில்

இக்கட்டான நிலைமையில் ஏற்படும் இயலாமையின் நிமித்தம் செய்யப்படும் விரும்பத்தகாததொன்று

ஆத்திரப்படல்

கோவப்படல், பொறாமைப்படல்

ஆத்து

தேனீர் கோப்பி போன்றவற்றினை தயாரித்தல், தேனீர் போன்றவற்றை ஆறவைக்கும் ஒரு முறை

ஆத்துதல்

ஆற்றுதல், தணித்தல், ஆறுதல் படுத்தல்

ஆத்துப் பறந்து

பயத்தினால் தோன்றும் குழப்பநிலை

ஆத்துமா ஆத்தாதா

சில சிறுவர் விளையாட்டுக்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதற்கு, முடியுமா? அல்லது முடியாத? என்பதனை ஒரு தரப்பார் மறு தரப்பாரிடம் கேட்கும் முறை

ஆத்தே

ஐயோ பாவம் எனும் பரிதாபத் குறிப்பு

ஆத்தையப்பா

தாயின் தகப்பன்

ஆத்தையைத்தின்னி

சிறுவயதில் தாயை இழந்தவன் இழி குறிப்பு

ஆமார்

கல்லுடைத்தல் போன்ற கனமான வேலைகளிற்கு பயன்படும் பெரிய வகைச் சுத்தியல்

ஆமான

தகுதியான

ஆமை வேகம்

மிகவும் மெதுவான வேகம்

ஆமோ மெய்யாத்தானோ என வரல்

விடயமொன்று தொடர்பில் ஒருவர் எதிர்ப்பினை வெளிப்படுத்துவதனை இன்னுமொருவர் குறிப்பிடும் முறை

ஆய்ச்சல்

முறை, தவணை, பறித்தல், பிடுங்குதல், உடனே

ஆயக்குத்தகைகாறன்

ஆயம் வசூலிப்பவர்

ஆயத்தம் பண்ணு

ஆயத்தம் செய்தல்

ஆயிரங்காய்ச்சி

பனைப் பெயர்

ஆயிரத்தெட்டு

பல

ஆர்க்கை

பனங்கிழங்கின் தும்பு, புகையிலை வெட்டியபின் நிழல் வாட்டத்துக்காக கொட்டிலில் கட்டித்தொங்கப் பயன்படுத்தும் நார், தென்னங் குருத்தோலை, கயிறு முதலியன