ஆ - வரிசை 62 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஆண் நாள்

பரணி
கார்த்திகை
உரோகிணி
புனர்பூசம்
பூசம்
அத்தம்
அனுடம்
திருவோணம்
பூரட்டாதி
உத்திரட்டாதி

ஆண் பாற் பிள்ளைத் தமிழ்ப் பருவம்

காப்பு
செங்கீரை
தாலம்
சப்பாணி
முத்தம்
வருகை
அம்புலி
சிறுபறை
சிற்றில் சிதைத்தல்
சிறு தேருருட்டல்

ஆண்களின் 7 பருவங்கள்

பாலன் <7
மீளி 8-10
மறவோன் 11-14
திறவோன் 15
விடலை 16
காளை 17-30
முது மகன் >30

ஆர்பதம்

வண்டு
உணவு

ஆஸ்திகம்

ஆஸ்தி என்றால் உடைமை அல்லது சொத்து எனப் பொருள்தரும். இதனடிப்படையில் கடவுள் உள்ளார் என்ற நம்பிக்கையாளர்கள் ஆஸ்திகர்கள் எனப்படுகின்றனர்.இக்கொள்கையே ஆத்திகம் எனப்படுகிறது.

ஆவலி

புலம்புதல் அல்லது அழுதல் எனப்பொருள்படும்

ஆறு அறிவுகள்

உணர்தல்
ருசித்தல்/சுவைத்தல்
மணத்தல்/நுகர்தல்
பார்த்தல்
கேட்டல்
பகுத்தறிவு

ஆஸ்பத்திரி

ஆசு'பத்திரி. (நோய்களுக்கு ஏற்ப மருந்து தரும் இடம்)

ஆஊ எனல்

பதபதைப்புக் குறிப்பு

ஆக்கள்

சனங்கள்

ஆகவும் விடவிடத்தான்

அதிகமாக விட்டுக் கொடுத்தமையினால் தான் (ஒருவர் நியமங்களை மீறிச் செயற்படுகின்றார் என்ற கருத்து)

ஆகாசக் கப்பல்

ஆகாய விமானம்

ஆச்சியம்மா

தாயின் தாய்

ஆச்சோ போச்சோ

ஒன்று பற்றி தனது அதிருப்தியினை ஒருவர் மிக மோசமாக வெளிப்படுத்துவார் என்ற குறிப்பு

ஆசறுதி

மிகவும் உறுதி வாய்ந்தது

ஆசுப்பத்திரி

வைத்தியசாலை

ஆசூச உருத்து

ஆசெளச நிகழ்வொன்று ஒருவருக்கு ஏற்பட்டமையினால் தாமும் ஆசெளசத்திற்கு உள்ளாகும் ஆண்வழி இரத்த உறவு

ஆசூசக்காரர்

ஆசெள நிகழ்வொன்று ஏற்பட்டமையினால் ஆசெளசத்திற்கு உள்ளாகியவர்

ஆசை மாமா

மாமா, அதிக மாமன்மார் இருப்பின் ஒருவரை இவ்வாறழைப்பார்

ஆசை மாமி

மாமி, அதிக மாமிமார் இருப்பின் இருவரை இவ்வாறழைப்பார்