ஆ - வரிசை 60 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஆமணக்குநெய் | கொட்டைமுத்தெண்ணெய் |
ஆர்த்து | causative of ஆர் |
ஆடுகளம் | விளையாட்டு மைதானம் |
ஆவென்ன | வியப்பு |
ஆனகம் | முழங்கு முகில் |
ஆழி | கடல் |
ஆனும் | ஆயினும். ஐந்தை யனைத்தானு மாற்றிய காலத்து (நாலடி.329) |
ஆளி | வில்லாளி |
ஆகிடந்து | நிகழ்கால இடைநிலைகளுள் ஒன்று. (நன். 145, இராமா.) |
ஆகலாகல் | ஆகவாக.(தொல்.சொல்.280, சேனா.) |
ஆகவாக | உடம்படாமை ஆதாரமின்மைகளைக் குறிக்கும் அசைநிலை. (தொல்.சொல்.280. சேனா.) |
ஆனம் | எழுத்துச்சாரியை. (தொல்.சொல்.298,உரை.) |
ஆநின்று | Present tense affirmative particle as in செய்யாநின்றான் |
ஆவிருந்து | நிகழ்காலங்காட்டும் ஓர் இடைநிலை. கரும மாராயாவிருந்து (S.I.I.iii,137). |
ஆவா | இரக்கக்குறிப்பு. (திவ்.திருவாய்.6, 10, 4.) |
ஆர்ப்பரித்தல் | ஆரவாரித்தல். மறைகளார்ப்பரிப்பும் (மச்சபு. திரிபுரநிருமாணவ. 14). |
ஆலாப்பறத்தல் | திண்டாடுதல் |
ஆறப் போடுதல் | ஒரு காரியத்தைக் காலந்தாழ்த்தி செய்தல் |
ஆனைச்சாத்தன் | கரிக்குருவி |
ஆதித்தன் | ஆதித்தியன் |