ஆ - வரிசை 6 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஆட்டுத்தாடி

(ஆட்டுக்கு இருப்பது போல தாடைப் பகுதியில் மட்டும் வளர்த்துக் கொள்ளும் தாடி

ஆட்டுத்தொட்டி

(இறைச்சிக்காக)ஆட்டை வெட்டும் இடம்

ஆட்படு

உட்படு
நல்ல நிலைக்கு வருதல்
உயர் நிலையை அடைதல்குணமடைதல்
அடிமையாகு
அடிமையாகக் கொள்
ஆட்படுதல்
ஆட்படுத்தல்

ஆட்படுத்து

உட்படுத்துதல்

ஆடம்பரம்

பகட்டு
பகட்டான வெளித் தோற்றம்

ஆடம்பர வரி

ஆடம்பரப் பொருட்களின் விலை,நட்சத்திர விடுதிக் கட்டணம் போன்றவற்றோடு சேர்த்து வசூலிக்கப்படும் வரி

ஆடல்

அசைதல்
அதிர்தல்
நாட்டியம்
விளையாடல்
புணர்தல்
சொல்லுதல்
நீராடல்
ஆட்சி செய்தல்
வெற்றி
போர்

ஆடவன்

ஆண்
வாலிபன்
முப்பத்திரண்டு முதல் நாற்பத்தெட்டு வயதுக்குட்பட்ட பருவத்தினன்

ஆடாதொடை

(மருந்தாகப் பயன்படும்)சற்றுக் குழகுழப்பான நீர்த்தன்மையுடைய தண்டையும் தடித்த இலைகளையும் கொண்ட வெண்ணிறப் பூப் பூக்கும் ஒரு வகைக் குத்துச் செடி

ஆடி

ஒரு தமிழ் மாதத்தின் பெயர்
கடகம் ( 31 ) ( 17 Jul)
உத்தராட நட்சத்திரம்
கூத்தாடுபவன்
கண்ணாடி
பளிங்கு

ஆடித்திரி

சுற்றித்திரிதல்

ஆடித்தூக்கம்

(பெரும்பாலும் வியாபாரம் குறித்து வரும்போது)ஆடிமாதத்தில் நிலவும் மந்த நிலை

ஆடிப்பெருக்கு

ஆடி மாதம் பதினெட்டாம் நாள் சுமங்கலிகளும் புதுமணத்தம்பதிகளும் செய்யும் வழிபாடு
காவிரி நதியில் ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஏற்படும் வெள்ளம்

ஆடிப்போதல்

(எதிர் பாராத செய்தி நிகழ்ச்சி போன்றவற்றால்) மிகவும் பாதிப்பு அடைதல்
நிலை குலைதல்

ஆடு

ஒரு வீட்டு விலங்கு
வெள்ளாடு
செம்மறியாடு

ஆடு

நடனம் ஆடுதல்
அசைதல்
நடுங்குதல்
விளையாடுதல்

ஆடுசதை

முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடையில் உள்ள பிந்தசை

ஆடுபுலியாட்டம்

கட்டங்களில் புலியாக மூன்று காய்களையும் ஆடாக 12 காய்களையும் வைத்து இருவர் விளையாடும் விளையாட்டு

ஆடை

சட்டை
தைத்த துணி
உடை அல்லது சீலை
பால் போன்ற பொருளின் மேல் திரளும் ஏடு
சித்திரை நட்சத்திரம்

ஆடை

பனங் கிழங்கின் தோலிற்கும் கிழங்கிற்கும் இடையில் இருக்கும் வெண்ணிறமான பகுதி