ஆ - வரிசை 59 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஆராமை | தெவிட்டாமை |
ஆராவமுதம் | தெவிட்டாத அமிர்தம் |
ஆரியக்கூத்து | கழைக்கூத்து |
ஆரியன் | ஆரிய இனத்தவன் |
ஆரியாவர்த்தம் | இமயமலைக்கும் விந்தியமலைக்கும் இடைப்பட்ட பிரதேசம் |
ஆருகதம் | சமண மதம் |
ஆருகதன் | சமணன் |
ஆரூடம் | ஏறிய நிலையிலுள்ளது |
ஆரூடன் | சீவன்முத்தன் |
ஆலகாலம் | பாற்கடலைக் கடைந்த பொழுது தோன்றிய நஞ்சு |
ஆலங்கட்டி | கல் மழை(பனிக்கட்டி மழை) |
ஆலசியம் | சோம்பல் |
ஆலத்தி | மஞ்சள் நீர் அல்லது விளக்கு போன்ற பொருளைச் (மணமக்கள் முன் அல்லது விக்கிரகத்துக்கு முன்) சுற்றுதல் |
ஆலல் | மயிலின் குரல் |
ஆலாபி | ஓர் இராகத்தை விஸ்தாரமாகப் பாடு |
ஆலாலம் | (ஆலகாலம்) பாற்கடலைக் கடைந்தபொழுது பிறந்த நஞ்சு |
ஆலி | மழை |
ஆவணக்களம் | பத்திரம் பதிவு செய்யுமிடம் |
ஆசுகம் | ஆசுகி |
ஆக்கெளுத்தி | கெளிற்று மீன்வகை |