ஆ - வரிசை 58 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஆயத்தார் | ஒரு பெருமாட்டியின் தோழியர் |
ஆயர்பாடி | இடையர் சேரி |
ஆயன் | இடையன் |
ஆயாள் | தாய் |
ஆயுள்வேதம் | (ஹிந்து வைத்திய சாத்திரம்) |
ஆர் | ஆத்திமரம் |
ஆர் | யார் |
ஆர்கலி | கடல் |
ஆர்வம் | ஒரு பொருளைப் பெற விரும்பு |
ஆர்வலம் | அன்புகொண்டவன் |
ஆர்வலித்தல் | அன்பு மிகுதல் |
ஆர | நிறைய |
ஆரஞ்சு | கிச்சிலி |
ஆரண்யகம் | வேதத்தின் ஒரு பகுதி |
ஆரணம் | வேதம் |
ஆரணியம் | காடு |
ஆரதி | தீப ஆராதனை |
ஆரபி | ஓர் இராகம் |
ஆரல் | கார்த்திகை நட்சத்திரம் |
ஆராமம் | சோலை |