ஆ - வரிசை 57 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஆதிசேடன் | விஷ்ணுவின் படுக்கையாயுள்ள அனந்தன் என்ற நாகம் |
ஆதித்தவாரம் | ஞாயிற்றுக் கிழமை |
ஆதித்தாய் | (விவிலிய நூலின் படி) முதல் தாயான ஏவாள் |
ஆதிமூலம் | முதல் காரணம் |
ஆதிரை | திருவாதிரை நட்சத்திரம் |
ஆதுலர்சாலை | ஏழை எளியோர்க்கு அன்னமிடும் சாலை |
ஆதுலன் | வறியவன் |
ஆந்திரம் | தெலுங்கு நாடு |
ஆப்தன் | நெருங்கிய நண்பன் |
ஆப்திகம் | இறந்தவர்க்கு முதல் ஆண்டு முடிவில் செய்யப்படும் திதி |
ஆபிசாரம் | மாந்திரிகம் |
ஆப்பிரிக்கா | பூமியில் ஒரு கண்டப்பகுதி |
ஆம்பி | காளான் (நாய்க்குடை) |
ஆமசிராத்தம் | பக்குவம் செய்யாத உணவுப் பொருள்கள் கொண்டு செய்யப்படும் திதி |
ஆமந்திரிகை | ஒருவகைப் பறை |
ஆமலகம் | நெல்லி மரம் |
ஆமாத்தியன் | மந்திரி |
ஆய்ப்பாடி | இடையர் சேரி |
ஆயக்காரன் | சுங்கம் வாங்குபவன் |
ஆயக்கால் | பவனி வரும் பொழுது பல்லக்கைத் தாங்கும் முட்டுக்கால் |