ஆ - வரிசை 55 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஆஸ்தானம் | அரசவை |
ஆஜானுபாகு | அருகி வரும் வழக்கு. நல்ல உயரமும் உயரத்துக்கு ஏற்ற எடையும் உடைய |
ஆச்சாரி | தச்சர், பொற்கொல்லர், கருமார், சிற்பி, கன்னார் போன்ற தொழில் செய்பவர்கள் |
ஆதலின் | எனவே |
ஆசாரவாசல் | ஒரு கோயிலின் அல்லது அரண்மனையின் வெளிமண்டபம் |
ஆசானுபாகு | முழங்கால் வரை நீண்ட கையுடையவன் |
ஆசியா | பூமியின் கண்டங்களுள் ஒன்று |
ஆசிரியம் | தமிழ்யாப்பிலக்கணத்தில் கூறியுள்ள நால்வகைப் பாக்களில் ஒன்று (அகவல்பா) |
ஆசிரியவசனம் | மேற்கோளாக எடுத்துக் காட்டக்கூடிய பிற ஆசிரியரின் வாக்கு |
ஆசிரியன் | உபாத்தியானன் |
ஆசினி | ஈரப் பலாமரம் |
ஆசீவகன் | சமணத்துறவி |
ஆசு | குற்றம் |
ஆஞ்ஞாபி | கட்டளையிடு |
ஆஞ்ஞை | கட்டளை உத்தரவு |
ஆட்செய் | தொண்டு செய் |
ஆட்சேபி | தடை செய் |
ஆட்டுரல் | அரைக்க உதவும் கல் உரல் |
ஆட்டுரோசனை | ஆடுகளின் இரைப்பையில் உண்டாகும் கல் போன்ற ஒரு பொருள் |
ஆட்பிரமாணம் | (சராசரி) ஆளின் உயரம் |