ஆ - வரிசை 54 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஆரை | நீர்த்தாவரமான ஆரை, கோரைப்புல் போன்றதனால் பின்னப்பட்ட பாய் |
ஆரியவர்த்தம் | ஆரியன் |
ஆரிடர் | முனிவர் |
ஆராதனம் | ஆராதனை |
ஆகாமியம் | அக்கிரமம் |
ஆவணக்களரி | ஆவணக்களம் |
ஆக்கல் | படைத்தல் |
ஆக்கினை | கட்டளை |
ஆகம் | உடம்பு |
ஆகமனம் | வந்து சேர்தல் |
ஆகரம் | இரத்தினக் கற்கள் கிடைக்கும் சுரங்கம் |
ஆகாசக்கோட்டை | (உண்மையில் இல்லாத) கற்பனை |
ஆகாய கமனம் | காற்றில் நடந்து செல்லும் வித்தை |
ஆகாசத்தாமரை | கொட்டைப்பாசி |
ஆகாயம் | ஐம்பூதங்களில் ஒன்றான 'வெளி' வானம்; வாயுமண்டலம் |
ஆகாதவன் | பகைவன் |
ஆகு | எலி |
ஆகுலம் | மனக் கலக்கம் |
ஆங்காலம் | நல்ல காலம் |
ஆசாபங்கம் | விரும்பியது பெறாத ஏமாற்றம் |