ஆ - வரிசை 52 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஆஸ்தி | செல்வம் |
ஆதனோரி | ஒரு வள்ளல் |
ஆதிசைவன் | பதினாறு சைவர்களுள் ஒருவன் |
ஆதிதேவன் | சிவபெருமான், கதிரவன், முதற்கடவுள் |
ஆதித்தமணி | கதிரவன் |
ஆதிபகவன் | கடவுள் |
ஆதிபூதன் | நான்முகன், முன்பிறந்தன், முன்னுள்ளவன் |
ஆதிமுத்தர் | மலம்நீங்கினவர் |
ஆதிரைமுதல்வன் | சிவன் |
ஆதிரையான் | சிவன் |
ஆநந்தன் | அருகன், கடவுள், சிவன், பலராமன் |
ஆமேரேசர் | ஏகாம்பர நாதர் |
ஆமுகர் | நந்திதேவர் |
ஆயிரம்பெயரோன் | திருமால் |
ஆரணத்தான் | நான்முகன் |
ஆரணன் | நான்முகன், சிவன், திருமால், பார்ப்பான் |
ஆரூரன் | சுந்தரமூர்த்தியார் |
ஆலமர்செல்வன் | சிவபெருமான் |
ஆலவன் | திருமால் |
ஆலிநாடன் | திருமங்கையாழ்வார் |