ஆ - வரிசை 50 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஆனைக்கன்று | அத்திமரம், யானைக்குட்டி. |
ஆனைக்கால்வாதம் | ஒருவகை வாதநோய். |
ஆனைக்கூடம் | ஆனைக்கட்டுமிடம். |
ஆனைக்கோடன்சுரை | ஒருவகைச்சுரை. |
ஆனைக்கோடு | ஆனைக்கொம்பு. |
ஆனைசேனை | மிகுதி. |
ஆனைச்சப்பரம் | அம்பாரி. |
ஆனைச்சீரகம் | ஒருபூடு. |
ஆனைச்செவியடி | ஒருபூண்டு. |
ஆனைத்தடிப்பு | ஒரு பூடு. |
ஆனைத்திசை | வடக்கு. |
ஆனைத்தும்பை | பெருந்தும்பை. |
ஆனைத்தோட்டி | அங்குசம். |
ஆனைப்படுவன் | விலங்கினோர்நோய். |
ஆனைப்பந்தி | ஆனைக்கூட்டம். |
ஆனைப்பிச்சான் | ஒருபூண்டு. |
ஆனைமஞ்சள் | ஒருபூடு. |
ஆனைமத்தகம் | கும்பம். |
ஆனைமீன் | ஒரு பெருமீன். |
ஆனைமுகத்தோன் | விநாயகன். |