ஆ - வரிசை 5 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஆட்கொணர்வு மனு

குறிப்பிட்ட நபர் சட்டத்திற்குப் புறம்பாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்ற சந்தேகத்தின் பேரில் அடைத்துவைக்கப்பட்டவரை ஆஜர்படுத்தக் காவல்துறையினருக்கோ அல்லது தனிநபருக்கோ ஆணை வழங்கும்படி ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் அல்லது உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் மனு

ஆட்கொல்லி

1.(பெரும்பாலும் பெயரடையாக) மனிதர்களைக் கொன்று தின்னக் கூடிய(புலி,சிறுத்தை போன்ற) விலங்கு 2.(நோயைக் குறித்து வரும்போது) மரணத்தை விளைவிக்கும் அளவுக்குக் கொடுமை வாய்ந்தது,உயிர்க்கொல்லி

ஆட்கொள்

அடியாராக ஏற்றுக்கொள்ளுதல்
வசப்படுத்துதல்
அடிமையாகக் கொள்
பக்தனாக ஏற்றுக் கொண்டு அருள் செய்
ஆட்கொள்ளுதல்

ஆட்சி

அரசு நிர்வாகம்
ஆளுகை/ஆளுதல்
உரிமை
அனுபவம்
வழக்கம்
ஒரு கிரகத்தின் உரிமை ராசி

ஆட்சி ஆண்டு

ஒரு அரசர் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து கணக்கிடப்படும் ஆண்டு

ஆட்சிமன்றம்

பல்கலைக்கழகத்தின் நிதி,சொத்து போன்றவை நிர்வகிக்கும்,விதிமுறைகளை வகுக்கும்,தேர்வு நடத்தி முடிவுகளை அறிவிக்கும் அதிகாரங்களைக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையும் நியமன உறுப்பினர்களையும் கொண்ட அமைப்பு

ஆட்சிமொழி

அரசு தன் நிர்வாகத்தில் பயன்படுவதற்குச் சட்டத்தின் மூலம் வழி செய்திருக்கும் மொழி

ஆட்சியர்

ஒரு மாவட்டத்தில் வரி வசூலித்தல்,சட்டம்,ஒழுங்கு வலர்ச்சிப்பணி முதலியவற்றைக் கவனிக்கும் முதன்மைப் பொறுப்பில் உள்ள அரசு அதிகாரி

ஆட்சேபணை

தடை
மறுப்பு
எதிர்ப்பு
கண்டனம்

ஆட்டக்காரர்

1.விளையாட்டு வீரர் அல்லது வீராங்கனை 2.கூத்து,கரகம் போன்ற நாட்டுப்புறக் கலைகளை ஆடுபவர்

ஆட்டகாரி

நடத்தை கெட்ட பெண்

ஆட்டநாயகன்

குறிப்பிட்ட ஒரு பந்தயத்தில் சிறப்பாக விளையாடிய வீரருக்கு வழங்கப்படும் விருது

ஆட்டபாட்டம்

ஆரவாரம் மிகுந்த கேளிக்கை, ஆரவாரத்துடன் கூடிய பாட்டும் நடனமும்

ஆட்டம்

நடனம்
அசைவு
அதிர்வு
விளையாட்டு
கூத்து

ஆட்டம்காண்

உறுதியான நிலையிலிருந்து வலுவற்ற நிலைக்கு வருதல்

ஆட்டம்போடு

கட்டுப்பாடோ நிதானமோ இல்லாமல் நடந்து கொள்ளுதல்

ஆட்டமிழத்தல்

ஒரு விழையாட்டில் மேற்கொண்டு விழையாட முடியாமல் ஆகுதல்

ஆட்டிப்படை

தான் விரும்பியபடியெல்லாம் பிறரை நடக்கச் செய்தல்,ஆட்டிவைத்தல்

ஆட்டு

உலுக்கு,குலுக்கு,அசைத்தல்
விளையாட்டு
கூத்து
அசையச் செய்
அதிரச் செய்
அலைத்து வருத்து
வெற்றியடை
கூத்தாடச் செய்
நீராட்டுவி
எந்திரத்தில் அரை
ஆட்டுதல்

ஆட்டுக்கல்

ஆட்டுரல்,வட்ட அல்லது சதுரவடிவக் கல்லின் நடுவே குழியும்,குழியில்பொருந்தி நின்று சுழலக்கூடிய குழவியும் உடைய மாவு அரைக்கும் சாதனம்
அரைக்க உதவும் கல்லுரல்
ஆட்டுரோசனை