ஆ - வரிசை 48 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஆற்றி | ஆறுதல். |
ஆற்றுச்சிப்பி | ஆற்றுக்கிளிஞ்சல். |
ஆற்றுச்சுழி | ஆற்றுநீர்ச்சுழி. |
ஆற்றுத்தும்மட்டி | பேய்க் கொம்மட்டி. |
ஆற்றுநத்தை | ஒருவிதநத்தை. |
ஆற்றுநீர் | ஆற்றுச்சலம். |
ஆற்றுநீர்ப்பொருள்கோள் | பொருள்கோளெட்டினொன்று. |
ஆற்றுநெட்டி | நீர்ச்சுண்டி. |
ஆற்றுப்பச்சை | நாகப்பச்சை, பச்சைக்கல். |
ஆற்றுப்பாசி | ஒருபூண்டு. |
ஆற்றுப்பித்தல் | ஆற்றோரம். |
ஆற்றுப்பூத்தான் | பூனைக்காலி. |
ஆற்றுப்பூவரசு | ஒருமரம். |
ஆற்றுப்பெருக்கு | வெள்ளம். |
ஆற்றுமரி | நீருமரி. |
ஆற்றுமல்லிகை | ஒருமல்லிகை. |
ஆற்றுமுள்ளி | கண்டங்கத்திரி. |
ஆற்றுமேலழகி | ஒருபூடு. |
ஆற்றுவாளை | ஒருமீன். |
ஆற்றெதிர்படல் | வழி யெதிர்ப்படல். |