ஆ - வரிசை 47 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஆழிமுரசோன் | மன்மதன். |
ஆழிவிட்டோன் | சிவன், விட்டுணு. |
ஆழிவித்து | முத்து. |
ஆழிவெம்முரசோன் | மன்மதன். |
ஆழ்ந்தகருத்து | உட்கருத்து. |
ஆழ்ந்தவறிவு | மகா அறிவு. |
ஆளன | எசமான். |
ஆளியூர்தி | காளி, துர்க்கை. |
ஆளிவிரை | ஒருவிரை. |
ஆளோலை | அடிமைச்சீட்டு. |
ஆள்விழுங்கி | நீளவங்கி. |
ஆறாக்காரியம் | தோற்றம். |
ஆறுகாட்டி | மாலுமி, வழிகாட்டி. |
ஆறை | ஆற்றூர். |
ஆற்காடு | ஓரூர். |
ஆற்பலம் | சாரம், பலம். |
ஆற்றலரி | சுடலைப்பூச்செடி, செங்கோட்டை. |
ஆற்றலுடைமை | வலியுடைமை. |
ஆற்றல்கேடு | வலியழிவு. |
ஆற்றாக்கொலை | ஆற்றாப்பட்சம். |