ஆ - வரிசை 46 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஆவளிப்பு | ஆசை, வளைவு. |
ஆவிசீவாளம் | யாவச்சீவன். |
ஆவிடையார் | ஆவுடையார். |
ஆவிபத்திரம் | புகையிலை. |
ஆவிபோதல் | சாதல். |
ஆவிப்பதங்கம் | வைப்புச்சரக்கு. |
ஆவிப்பு | கொட்டாவி. |
ஆவியேகல் | இறத்தல். |
ஆவியேற்றம் | பெருமூச்சு. |
ஆவிரங்காய் | ஆவாரைக்காய். |
ஆவிரம்பு | ஆவாரம்பூ. |
ஆவிவிடல் | உயிர்விடல். |
ஆவுகன் | தகப்பன். |
ஆவுத்தன் | தமக்கைபுருடன். |
ஆவுளிப்பேச்சு | ஆதரவற்ற பேச்சு,ஒழுங்கற்றபேச்சு. |
ஆவேட்டகம் | கேலி. |
ஆவேட்டனம் | சுற்றுதல். |
ஆவேதகன் | வழக்காளி. |
ஆழிக்கொடி | பவளம். |
ஆழித்தல் | ஆழமாகத்தோண்டல். |