ஆ - வரிசை 42 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஆயிரங்கதியோன் | ஆதித்தன். |
ஆயிரநாமன் | சிவன், திருமால். |
ஆயிளை | கொடுவாட்டலை. |
ஆயினிமேனி | பச்சைக்கல். |
ஆயுகம் | வயது. |
ஆயுகாரன் | சனி. |
ஆயுஷ்மான் | தீர்க்காயுசுடையவன். |
ஆயுதபரிட்சை | படைக்கலப்பயிற்சி. |
ஆயுதாகரம் | ஆயுதசாலை. |
ஆயுதேந்திரம் | விஷ்ணுசக்கரம். |
ஆயும்யாழ்முனி | நாரதர். |
ஆயுர்வர்த்தனை | ஆயுசுவிருத்தி. |
ஆயோதனம் | ஆயோதம் |
ஆய்ச்சாதி | இடைச்சாதி. |
ஆரகட்டம் | ஆழமாகிய கிணறு. |
ஆரகுவதம் | கொன்றை. |
ஆரகோரம் | கொன்றை. |
ஆரசகம் | அகில். |
ஆரஞ்சோதி | அருந்ததி. |
ஆரத்தியம் | ஒளி. |