ஆ - வரிசை 4 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஆசாரம்

இலிங்கா சாரம்
சதாசாரம்
சிவா சாரம்
பிரத்யா சாரம்
கணா சாரம்

ஆசாரி

தச்சுத் தொழில் செய்பவன்/இரும்பு அல்லது பொன் வேலை செய்பவர்

ஆசாரியர்

ஆன்மீக குரு

ஆசான்

ஆசிரியர்
உபாத்தியாயன்
குடும்ப குரு
தேவகுருவான வியாழன்
முருகக் கடவுள்

ஆசி

ஆசீர்வாதம்
வாழ்த்து

ஆசிரமம்

முனிவர் அல்லதுஆன்மிக நெறியில் ஈடுபட்டோர் வாழும் இடம்
முதியோர் ஆதரவற்றோர் போன்றோர்க்குப் பாதுகாப்பு தரும் முறையில் அமைக்கப்படும் இடம்

ஆசிரமம்

பிரமசரியம்
கிருகத்தம்
வானப் பிரஸ்தம்
சந்யாசம்

ஆசிரியர்

கல்வி,கலை போன்றவற்றைக் கற்பிப்பவர்
கட்டுரை நாவல் அல்லது செய்தித்தாள் போன்றவற்றை எழுதுபவர்

ஆசிரியர் உரை

தலையங்கம்

ஆசிரியை

பெண் ஆசிரியர்

ஆசீர்வதி

சீரும் சிறப்பும் நன்மையும் பெறுமாறு வாழ்த்துதல்

ஆசுகவி

பாடவேண்டிய பொருளைக் கொடுத்த உடனேயே செய்யுள் இயற்றும் புலமை பெற்ற புலவர்

ஆசுவாசம்

ஆறுதல்
நிம்மதி
இளைப்பாறுதல்

ஆசை

அவா
விருப்பம்
ஆவல்

ஆசைகாட்டு

(ஒருவரை ஏமாற்றும் நோக்கத்தோடு) ஒன்றை அடைந்துவிடலாம் என்ற உணர்வைத் தருதல்

ஆசைநாயகன்

திருமணமான பெண் (கணவன் அல்லாது)தன் இச்சைக்கு வைத்திருக்கும் ஆண்

ஆசைநாயகி

திருமணமான ஆண் (தன் மனைவி அல்லாது)தன் இச்சைக்கு வைத்திருக்கும் பெண்

ஆசைப்படு

(ஒன்றை செய்ய அல்லது பெற) விரும்புதல்

ஆசை வார்த்தை

(ஒருவரை ஏமாற்றும் நோக்கத்தோடு அவரது)விருப்பத்தை அல்லது ஆவலைத் தூண்டும் விதத்தில் பேசப்படும் வார்த்தைகள்

ஆட்குறைப்பு

வேலை செய்பவர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல்