ஆ - வரிசை 37 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஆதிமூர்த்தி

கடவுள், ஆதிமூலம்.

ஆதியங்கடவுள்

அருகன், கடவுள்.

ஆதியந்தபதிச்சா

சீக்கிரவுச்சம், மகரச்சா.

ஆதியந்தமில்லாதவன்

கடவுள், சிவன்.

ஆதிராச்சியம்

எகாதிபத்தியம்.

ஆதிரௌத்திரம்

சௌவீரம்.

ஆதிவராகன்

விட்டுணு.

ஆதிவருணன்

பார்ப்பான்.

ஆதுலர்க்குச்சாலையளித்தல்

அற முப்பத்திரண்டினொன்று.

ஆத்தாடியுள்ளான்

ஒரு குருவி.

ஆஸ்தானக்கோழை

சபைக்கோழை.

ஆஸ்தான சந்தோஷம்

கோணங்கித்தன்மை, விகடக்கூத்து.

ஆஸ்தானசந்தோஷி

விகடக்கூத்தன்,விகடக்கூத்தி.

ஆத்திகேடு

ஆற்றாண்மை, சத்துக்கேடு.

ஆத்திக்கனி

வெருகு.

ஆஸ்திக்காரன்

சம்பத்துடையவன்.

ஆஸ்திக்காரி

சம்பத்துடையவள்.

ஆத்திகுடி

ஔவைசெய்த ஒரு நூல்,சிவன்.

ஆத்தியன்

சிவன்.

ஆத்தியு

ஆவத்து.