ஆ - வரிசை 36 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஆதிகரன் | பிரமன். |
ஆதிகாரம் | முதற்காரணம். |
ஆதிகேசவன் | விட்டுணு. |
ஆதிக்கடுஞ்சாரி | நவச்சாரம். |
ஆதிச்சரக்கு | சூதம். |
ஆதிச்சனி | மகநாள். |
ஆதிதாரணம் | ஈடு. |
ஆதித்தபுத்தி | அருக்கபுத்தி. |
ஆதித்தமனி | சூரியன், முத்து. |
ஆதித்தன்கூர்மை | இலவண பாஷாணம். |
ஆதித்தன்வெள்ளை | ஆதித்தன்கூர்மை. |
ஆதித்தன்றேவி | உஷை, சாயை. |
ஆதித்தியை | சரச்சுவதி. |
ஆதிபராபரன் | கடவுள். |
ஆதிபலம் | சாதிக்காய். |
ஆதிபிட்சு | சிவன். |
ஆதிபூதம் | அதிட்டானபூதம். |
ஆதிமகாகுரு | துரிசு. |
ஆதிமகாநாதம் | உலோகமணல். |
ஆதிமத்தியாந்தம் | முதலிடைகடை. |