ஆ - வரிசை 35 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஆணிமுத்து

வயிரமுத்து.

ஆணெழுத்து

குற்றெழுத்து.

ஆண்குமஞ்சான்

குங்கிலியம்.

ஆண்கோள்

ஆண்கிரகம், அங்காரகன்,குரு, சூரியன்.

ஆண்டகைமை

ஆண்டன்மை, வீரம்.

ஆண்டண்டு

காதிற்புறவருகு.

ஆண்டளப்போன்

வியாழன்.

ஆண்டாள்

ஆள்வோன், எசமான்,கடவுள்.

ஆண்டிச்சி

பண்டாரத்தி.

ஆண்டொழில்

பராக்கிரமவேலை.

ஆண்டொழின்மைந்தன்

அருச்சுனன்.

ஆண்பிள்ளைச்சிங்கம்

வீரன்.

ஆதபத்திரம்

குடை
வெண்குடை

ஆதபநீயம்

ஒருவகைநெல்.

ஆதம்பாத மில்லாதவன்

ஆதரவில்லாதவன்.

ஆதனமூர்த்தி

சிவலிங்கம்.

ஆதாரதண்டம்

முதுகெலும்பு.

ஆதாளிக்காரன்

படாடோபக்காரன்.

ஆதாளிக்குதல்

ஆதாளிக்கல்.

ஆதாளித்தல்

ஆயாசப்படுதல்.