ஆ - வரிசை 34 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஆட்சேபிப்பு | தடை, மறுப்பு. |
ஆட்டாங்கள்ளி | திருகுகள்ளி. |
ஆட்டாங்கோரை | ஒருகோரை. |
ஆட்டாம்புழுக்கை | ஆட்டுமலம். |
ஆட்டுக்கடா | ஆணாடு. |
ஆட்டுக்காற்கல் | கொக்கைக்கல். |
ஆட்டுக்கிடை | ஆட்டுத்தொழுவம் |
ஆட்டுக்கோன் | சிவன். |
ஆட்டுசம் | ஆடாதோடை. |
ஆட்டுச்செவிப்பதம் | தேங்காய் வழுக்கைப் பருவம். |
ஆட்டுவாகனன் | அக்கினிதேவன். |
ஆட்டுவாணிபன் | கசாப்புக்காரன். |
ஆணகம் | சுரை. |
ஆணரி | ஓரி. |
ஆணவப்பிணிப்பு | ஆணவமலபந்தம். |
ஆணவேதி | ஆக்கினாபயதி. |
ஆணிக்குருகு | அடிக்குருகு. |
ஆணிக்கோவை | உரையாணிக்கொத்து. |
ஆணிப்பொன் | உயர்ந்த மாற்றுடைய பொன் |
ஆணிமாண்டவியர் | மாண்டவியன். |