ஆ - வரிசை 33 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஆச்சிரமத்தான் | ஆச்சிரமத்தையுடைவன். |
ஆச்சிலை | கோமேதகம். |
ஆச்சுவரி | அரசு. |
ஆச்சோதனம் | வேட்டை. |
ஆஞ்ஞாபித்தல் | கட்டளையிடல். |
ஆடற்கூத்தியர் | அகக்கூத்தாடுவோர். |
ஆடிக்கரு | கர்ப்போடகமேகம். |
ஆடிய | அளைந்த. |
ஆடுதல் | ஆடல் |
ஆடுதல் | மிக மெதுவாக செயற்படல், ஒழுக்க விழுமியங்களை கடைப்பிடிக்காமல் (குறிப்பாக இளம் பெண்கள்) செயற்படுகின்றார்கள் என்ற குறிப்பு |
ஆயுதுறை | ஓரூர். |
ஆடவான் | ஆடப்பட்டவன் நடேசன். |
ஆடூஉவறிசொல் | ஆண்பான் மொழி |
ஆட்காட்டி | ஆள்காட்டுகின்றவன் |
ஆள்காட்டுகின்றவள் | ஒருபுள், சுட்டுவிரல். |
ஆட்சபணம் | உபவாசம். |
ஆட்சபாடிகன் | நியாயாதிபதி. |
ஆட்சபாதன் | ஒரு தருக்கசாத்திரி. |
ஆட்சாரம் | குற்றச்சாட்டு. |
ஆட்சேபகம் | ஆற்றச்சாட்டு,நோய், வலி |