ஆ - வரிசை 32 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஆசியபாகவாதம்

ஆசியக்குதவாத வாதரோகம்.

ஆசியாசவம்

உமிழ்நீர்.

ஆசிரம்

இடம், தீ.

ஆசிரியத்தளை

ஆரியச்சீர்.

ஆசிரியநிலைவிருத்தம்

அடிமறியாதேவருவது.

ஆசிரியப்பா

ஐந்துபாவினொன்று அஃது அகவல்.

ஆசிரியமண்டலவிருத்தம்

அடிமறியாகவது

ஆசிரியர்மதம்

ஆசிரியமதம்.

ஆசிரியவுரிச்சீர்

அகவற்குறியசீர்.

ஆசிலேடம்

ஆலிங்கனம்.

ஆசீவகப்பள்ளி

சமணமுனிவர்மடம்.

ஆசுணம்

அசோகு, அரசு.

ஆசுபத்திரி

ஒருமரம்.

ஆசுரவைத்தியம்

இரணவைத்தியம்.

ஆசெடை

ஆசெடுத்தல்.

ஆசெதுகை

ஆசிடை யிட்டெதுகை.

ஆசைப்பெருக்கம்

அவா, பேராசை.

ஆசோத்தியம்

ஆயாசமின்மை.

ஆச்சாதநபலை

பருத்தி.

ஆச்சரபுரம்

ஒரு சிவஸ்தலம்.