ஆ - வரிசை 3 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஆங்கிலம்

இங்கிலாந்து,அமெரிக்கா முதலிய நாடுகளில் தாய் மொழியாகப் பேசப்படும் இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்திச் சேர்ந்த ஒரு மொழி
ஆங்கிலேயர்களின் மொழி

ஆங்கில மருத்துவம்

நவீன சிந்தனையின் அடிப்படையில் குறிப்பிட்ட உடல்நிலையின் காரணத்திற்கும் அதன் விளைவுகளுக்கும் உள்ள தொடர்புகளை ஆராய்வதன் மூலம் உடல்நலத்தை அணுகும் முறை

ஆங்கிலேய

இங்கிலாந்து நாடு,மக்கள்,பண்பாடு போன்றவற்றோடு தொடர்புடைய

ஆங்கிலோ இந்தியன்

ஒரு ஆங்கிலேயனுக்கும் ஒரு இந்தியனுக்கும் இடையே ஆன திருமன உறவின் மூலம் அல்லது அவர்கள் வழி வந்தவர்களுக்குப் பிறந்தவர்

ஆங்கு

அங்கு
அவ்விடத்து, அப்பொழுது, அவ்வாறு, போல ஓர் அசைச் சொல்

ஆச்சரியக்குறி

வியப்பு,பாராட்டு,அதிர்ச்சி வலி போன்றவற்றைத் தெரிவிக்க அல்லது விளிச்சொல்லுடன் பயன்படுத்த சிறுகுத்துக்கொட்டின் கீழ் புள்ளியை உடைய ' ! ' வடிவக் குறியீடு,வியப்புக்குறி

ஆச்சரியப்படுதல்

வியப்புக்கு உள்ளாதல்

ஆச்சரியப்படுத்து

வியப்புக்கு உள்ளாக்குதல்

ஆச்சரியம்

வியப்பு

ஆச்சி

வயதான பெண்மணி
பாட்டி
பெருமாட்டி

ஆச்சி

தாய், தாயின் தாய், தந்தையின் தாய், வயதான பெண், என்றால் என்ற வினையடி கருத்து

ஆசனப்பலகை

1.தரையில் போட்டு உட்காருவதற்குப் பயன்படுத்தும்(இரண்டு மரச்சட்டங்களுக்கு மேலே பொருத்தப்பட்ட) பலகை 2.(மாட்டு வண்டியில்) ஓட்டுபவர் அமர்வதற்கு ஏற்றவாறு அமைந்திருக்கும் அரைவட்ட மரப் பலகை

ஆசனப்பலகை

வண்டிலில் அதனைச் செலுத்துபவர் அமருவதற்று என அமைக்கப்பட்டிருக்கும் இருக்கை

ஆசனம்

இருக்கை
அமரும் பீடம்
தவிசு
யோகியர் அமரும் நிலை
மலம் வெளியேறும் வழி

ஆசனம்

பத்மாசனம்
சித்தாசனம்
சுவஸ்திகாசனம்
சுகாசனம்
சிரசானம்
சர்வாங்காசனம்
மத்சாசனம்
புஜங்காசனம்
தனுர் ஆசனம்
மயூராசனம்
திரிகோணாசனம்
சவாசனம்
அர்த்த மத்ஸ்யேந்திராசனம்
ஹாலாசனம்
சலபாசனம்
பஸ்சிமோத்தானாசனம்
யோகமுத்ராசனம்
பாதஹஸ்தாசனம்
உட்டியாணாசனம்
நெளவி முதலியன

ஆசனம்

பாராளுமன்றம், மாகாண சபை போன்றவற்றின் அங்கத்தவர்களின் எண்ணிக்கை

ஆசனவாய்

மலத்துவாரம்
மலவாய்
மலம் வெளியேறும் துவாரம்

ஆசாபாசம்

உலகப் பொருள்களின் மீதும் உறவுகளின் மீதும் வைக்கும் ஆசை,பாசம்,பற்று
ஆசையாகிய வலைக் கயிறு

ஆசாமி

(அறிமுகமில்லாத)ஆள்
ஓர் ஆள்

ஆசாரம்

ஒழுக்கம்