ஆ - வரிசை 29 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஆகாரி | உயிர், பூனை. |
ஆகிஞ்சனன் | வறியன். |
ஆகிரதம் | வணங்கல். |
ஆகிரம் | விரிவு. |
ஆகீசன் | விநாயகன். |
ஆகுகன் | கணபதி. |
ஆகுண்டிதம் | கோழை. |
ஆகுபுகு | பூனை. |
ஆகுரதன் | கணபதி. |
ஆகுலத்துவம் | கலக்கம். |
ஆகுவது | ஆவது. |
ஆகுவன | ஆவன. |
ஆகுவாகனன் | விநாயகன். |
ஆகூர்தி | கணபதி. |
ஆக்கதம் | முதலை. |
ஆக்கப்பொருள் | ஆகுபெயர்ப் பொருள். |
ஆக்கியாபித்தல் | கட்டளையிடல். |
ஆக்கிராணவிந்திரியகாட்சி | ஓரளவைந்து கந்தமறிதல். |
ஆக்கிராணவிந்திரிகம் | மூக்கு. |
ஆக்கிரோசனம் | சாபம். |