ஆ - வரிசை 26 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஆகாத | கெட்ட. ஆகாத பிள்ளை |
ஆசர் | See ஆஜர். |
ஆஜர் | நேர்வந்திருத்தலைக் குறிக்குஞ் சொல். |
ஆஜீர் | See ஆஜர் |
ஆகைச்சுட்டி | ஆகையால் (ஈடு, 7, 10, 8.) |
ஆயிட்டு | ஆகையால். அத்துவித மென்றசொல்லே அந்நியநாத்தியை யுணர்த்துமாயிட்டு (சி. போ. 2, 1, வார்த்திக.) |
ஆதல் | ஆவது எனப் பொருள்படுமிடைச்சொல். பொருந்துமோர் துலாத்தினாத லரைத்துலாம் பொன்னினாதல். தகடுசெய்தே (கூர்மபு.தான.65). |
ஆயிடை | அவ்விடம். (சீவக. 357.) |
ஆஆ | அதிசயவிரக்கச்சொல். |
ஆகணதாரம் | கைசிகநிஷாதம். |
ஆகந்துகமசூரிகை | ஆகந்தும் சூரிகைரோகம். |
ஆகந்துகம் | இடையில்வந்தது. |
ஆகமபதி | கடவுள். |
ஆகமர்ந்தோன் | விநாயகன். |
ஆகமனகாலம் | சங்கிராந்தி, பிரசவகாலம். |
ஆகமனித்தல் | வருதல். |
ஆகமன் | சிவன். |
ஆகமிலி | மன்மதன். |
ஆகரணம் | ஏவலன். |
ஆகருணணம் | கேட்குதல். |