ஆ - வரிசை 25 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஆதிநாதன் | கடவுள், சிவன் |
ஆதிநாராயணன் | வச்சிக்கல், திருமால் |
ஆதிபுங்கவன் | அருகன், கடவுள் |
ஆதிரன் | பெரியோன் |
ஆத்தன் | கடவுள், விருப்பமானவன், நம்பத்தக்கவன், அருகன் |
ஆயிரங்கண்ணன் | இந்திரன் |
ஆர்வலன் | அன்புடையவன் |
ஆலகண்டன் | சிவன் |
ஆலமுண்டோன் | சிவபெருமான் |
ஆழ்வார் | திருமால் அடியார், பக்தியில் ஆழ்ந்தவர் |
ஆங்காரம் | அகங்காரம் |
ஆதானும் | எதுவாயினும். ஆதானும் செய்ய (திவ்.இயற்.பெரியதிருவ.25). |
ஆயவன் | அத்தகையவன். ஆயவனோர் பகல். (கம்பரா.திருவவ. 1). |
ஆவர் | ஆவரிவை செய்தறிவார் (திவ். பெரியதி.3, 3, 7). |
ஆத்தாடி | ஆச்சரியக் குறிப்பு |
ஆகாதே | அல்லவா௯ அவன் கழல்கண்டு களிப்பன வாகாதே (திருவாச. 49, 1). |
ஆமா | See ஆமாம். |
ஆது | பாகர் யானையைத் தட்டிக்கொடுக்கையிற் கூறும் ஒரு குறிப்புச் சொல். (சீவக.1834.) |
ஆவ | இரக்கக்குறிப்பு. நாயினேனை யாவவென் றருளுநீ (திருவாச. 5, 74). |
ஆஅ | அதிசயம் இரக்கம் துக்கம் இவற்றின் குறிப்பு. (பிங்.) |