ஆ - வரிசை 24 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஆல்வாட்டு | உலர்ச்சி. |
ஆல்வு | அகலமானது. |
ஆவணீயம் | கடைவீதி. |
ஆவரி | அம்பு. |
ஆவளி | இரேகை, ஒழுங்கு |
ஆவிபத்தம் | பேராமுட்டி. |
ஆவிரை | ஆவாரை, ஒருமரம். |
ஆவு | குன்றி. |
ஆவுதி | ஆகுதி. |
ஆவோ | அதிசய விரக்கச்சொல். |
ஆளகம் | சுரைக்கொடி. |
ஆள்வள்ளி | மலைச்சக்கரவள்ளி. |
ஆறதீகம் | ஆறு, கல்நார். |
ஆறாதூறு | அவதூறு, அழிப்பு. |
ஆற்பதம் | சாரம். |
ஆற்றின்வித்து | கர்ப்பூரசிலாசத்து. |
ஆனமானவன் | சிறந்தவன். |
ஆனனம் | ஆநநம், முகம். |
ஆன் | பசுஞ்சாணம். |
ஆதித்தியன் | கதிரவன் |