ஆ - வரிசை 23 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஆரவம் | ஒலி. |
ஆராட்டு | தாலாட்டு. |
ஆராத்திரவியம் | அரசர் பொக்கசம். |
ஆராத்திரிகம் | ஆலாத்திவிளக்கு. |
ஆராவம் | ஆரவம், ஒலி. |
ஆரியவராடி | ஒருபெண். |
ஆருத்திரை | திருவாதிரை. |
ஆருப்பியம் | வங்கமணல். |
ஆருவம் | நீர். |
ஆர்கதி | திப்பிலி. |
ஆர்க்கு | எருக்கு, ஒருமீன். |
ஆர்த்தபம் | மகளிர்சூதகம். |
ஆலங்காடு | ஒரு சிவத்தலம். |
ஆலலம் | கூறை. |
ஆலாங்கட்டி | மழைக்கட்டி. |
ஆலாங்கட்டி | ஆலங்கட்டி |
ஆலாட்டு | ஆலவாட்டு. |
ஆலாத்தி | ஆலத்தி. |
ஆலு | நீர்க்குடம். |
ஆலேகனம் | எழுதுகை |