ஆ - வரிசை 20 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஆசிக்கல்

காகச்சிலை.

ஆசிரிதம்

ஆசிரயமானது.

ஆசீயம்

கருஞ்சீரகம்.

ஆசீவகர்

சமணமுனிவர்.

ஆசூசம்

சூதகம்.

ஆச்சந்திரகாலம்

சந்திர னுள்ளமட்டும்.

ஆச்சந்திரார்க்கம்

சூரிய சந்திராளுள்ளமட்டும்.

ஆச்சா

ஒரு மரம்.

ஆச்சிபூச்சி

ஒருவிளையாட்டு.

ஆச்சியம்

நெய்

ஆச்சு

ஆயிற்று
முடிந்தது

ஆஸ்பதம்

சத்து, புகலிடம்.

ஆஞ்சனேயன்

ஆஞ்சனா தேவியின் மகனான அனுமான்

ஆஞ்சில்

ஒருவிதப்பூடு, சங்கஞ்செடி.

ஆடகத்தி

குங்குமபாஷாணம்.

ஆடகி

துவரைச்சொடி.

ஆடகூடம்

செப்புமலை.

ஆடூஉ

ஆண்மகன்

ஆட்டை

ஆண்டு.

ஆணிச்செருக்கம்

இலவணபாஷாணம்.