ஆ - வரிசை 2 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஆகக்கூடி | ஆக்மொத்தம் |
ஆகட்டும் | சரி என்ற பொருளில் வாக்கியங்களைக்கு இடையே உள்ள தொடர்பைக் குறிக்கும் இடைச்சொல் |
ஆகமம் | சைவம்,வைணவம் முதலிய சமயங்களின் புனித நூல்கள் |
ஆகவும் | மிகவும் என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல் |
ஆகவும் | மிகவும் |
ஆகவே | அதன் காரணமாக |
ஆகா | வியப்பு,பாராட்டு,ஏளனம் போன்ற உணர்ச்சிகளைத் தெரிவிக்கும் இடைச்சொல் |
ஆகாத்தியம் | (விருப்பமில்லாத)ஒன்று நடக்கும்போது ஒருவர் செய்யும் அழுகையோடு கூடிய ஆர்ப்பாட்டம் |
ஆகாது | கூடாது |
ஆகாயக்கோட்டை | ஒருவர் தான் நினைக்கும் காரியம் நடக்காது என்று தெரிந்தும் அதை பற்றிப் பெரிய அளவில் செய்யும் கற்பனை |
ஆகாயத்தாமரை | 1.குளம் குட்டைகளில் படர்ந்து காணப்படும் வெளிர் மஞ்சள் நிறத்தில் பூக்கும் வட்ட அடுக்கில் இலைகளைக் கொண்ட தண்டுகளற்ற மிதக்கும் பூண்டு வகை 2.ஒரு வகைத் தாவர ஒட்டுண்ணி |
ஆகாரம் | (திட அல்லது திரவ)உணவு |
ஆகிய | பட்டியலாகக் குறிப்பிட்டவற்றைத் தவிர வேறு இல்லை என்பதைக் காட்டி அவற்றை வாக்கியத்துடன் தொடர்பு படுத்தும் இடைச்சொல் |
ஆகிருதி | (பெரும்பாலும் ஆண்களைக் குறித்துவரும்போது)உடம்பு |
ஆகிவந்த | மங்கலமான காரியங்கள் பல நடந்ததால் மிகவும் ராசியானது என்று நம்பப்படும்(வீடு,இடம்) |
ஆகுதல் | ஆவது என்ற பொருளில் வரும் இடைச்சொல் |
ஆகுதி | யாகத்தில் வளர்க்கும் தீயில் இடப்படும் பொருள் |
ஆகுபெயர் | ஒன்றன் பெயர் அதனுடன் தொடர்புடைய மற்றொன்றுக்குத் தொன்றுதொட்டு ஆகிவரும் பெயர் |
ஆகையால் | ஆகவே |
ஆங்காங்கு | அங்கங்கே |