ஆ - வரிசை 19 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஆனாலும்

ஒருவருடைய செயலை அல்லது இயல்பை மென்மையாகக் கண்டிக்கும் தொனியில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்
ஆயினும். (தாயு.சுகவாரி.5.)

ஆனி

தமிழ் வருடத்தில் மூன்றாவது மாதம்
ஆடவை (32 ) ( 15 Jun)

ஆனைத்தடிப்பான்

யானைச்சொறி

ஆகஸ்மீகம்

சடிதி.

ஆகண்டலன்

இந்திரன்.

ஆகிருநனந்தம்

புன்குமரம்.

ஆகுளி

ஒருவகைச் சிறு பறை

ஆகேடகம்

வேட்டை.

ஆக்கியானம்

கட்டுக்கதை.

ஆக்கியோன்

கட்டுக்கதை
படைத்தவன்
ஒரு நூல் செய்தவன்

ஆக்குவயம்

நாகம்.

ஆங்க

ஓரசைச்சொல்
அவ்வாறு
அவ்விதமே
உவம உருபு

ஆங்காரி

செருக்கன்.

ஆங்கிரசம்

ஆங்கிரசம்

ஆங்ஙனம்

அங்ஙனம்

ஆசந்தி

பாடை.

ஆசமனீயம்

ஆசமனியம்.

ஆசவுசம்

ஆசூசம்.

ஆசாசி

சீந்திற்கொடி.

ஆசாரியன்

ஆசாரி
துரோணன்
மதத் தலைவன்
மதகுரு
உபாத்தியாயன்