ஆ - வரிசை 18 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஆற்றாமை

(ஒரு சூழ்நிலையில்) எதுவும் செய்ய முடியாத நிலை,இயலாமை
தாங்கி கொள்ள முடியாமை
செயல் படுத்த முடியாமை

ஆற்று

மிகவும் சூடாக இருக்கும் ஒன்றின்)சூட்டை குறைத்தல்
(பசி,கோபம்,வலி முதலியவற்றை) தணித்தல்,குறைத்தல்
(காயத்தை,புண்ணை) குணமாக்குதல்
(முடியில் உள்ள ஈரத்தை காற்றில்) உலர்த்துதல்
(துன்பத்தில் இருப்பவரை)தேற்றுதல்/(பிறரிடம் கூறித் தன் மனச்சுமையை)குறைத்துக்கொள்ளுதல்
(பணி கடமை முதலியவற்றை) நிறைவேற்றுதல்
(உரை,சொற்பொழிவு)நிகழ்த்துதல்

ஆற்றுகைக்கலை

நிகழ்கலை

ஆற்றுத்தலை

ஆற்றின் முகத்துவாரம்

ஆற்றுப்படுத்து

(ஒன்றை அல்லது ஒருவரை)வழிநடத்துதல்,நெறிப்படுத்துதல்

ஆற்றொழுக்கு

(பேச்சு,எழுத்து நடையில்)சரளம்

ஆற அமர

நிதானமாக,பரபரப்பு இல்லாமல்

ஆற அமர

ஆறுதலாகவும் பதட்டமின்றியும்

ஆறப்போடு

(ஒரு பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணாமல்) தள்ளிப்போடுதல்

ஆறறிவு

(ஐம்புலன் உணர்வோடு கூடிய)பகுத்தறியும் திறன்

ஆறு

இரு கரைகளுக்கு இடையில் ஓடும் இயற்கையான நீர்ப் பெருக்கு/இவ்வாறு நீர்ப் பெருக்கு ஓடும் பரப்பு
ஐந்து என்ற எண்ணுக்கு அடுத்த எண்
சூடு குறைதல்,தணிதல்,குணமாதல்,ஓய்வெடுத்தல்,இளைப்பாறுதல்

ஆறுதல்

தெம்பு தருவது
தேறுதல்
நிதானம்

ஆறுதல் பரிசு

போட்டியில் கலந்துகொண்டபோதும் வெற்றிபெறாதவர்களை ஊக்குவிக்கும் விதமாகச் சிலருக்குக் கொடுக்கும் பரிசு

ஆன்மசுத்தி

ஆத்மசுத்தி,மனத் தூய்மை

ஆன்மா

உடலிலிருந்தும் மனத்திலிருந்தும் வேறானது என்றும் குனமற்றும் அழிவற்றும் இருப்பது என்றும் நம்பப்படுவது
உடல் இயக்கத்துடன் இருப்பதற்குக் காரணமானது எனக் கருதப்படுவது. ( உயிர்,ஆவி,பசு)

ஆன்மீகம்

வாழ்க்கையின் சாரம்சத்தைப் பற்றியும் மனிதர்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள உறவைப் பற்றியதுமான சிந்தனை

ஆனந்தம்

மகிழ்ச்சி
இன்பம்

ஆனபடியால்

ஆகையால் என்ற பொருளில் இரண்டு வாக்கியங்களைத் தொடர்பு படுத்தும் இடைச்சொல்

ஆனமானப்பட்ட

யோக்கியமான

ஆனால்

இரண்டு கூற்றுகளில் மாறாகவோ,விலக்காகவோ,நிபந்தனையாகவோ இருப்பதை முதல் கூற்றோடு தொடர்புபடுத்தும் இடைச்சொல்