ஆ - வரிசை 17 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஆழம்பார்

(ஒருவருக்கு எவ்வளவு தெரியும் என்பதை ) மறைமுகமான கேல்விகளால் அறிய முயலுதல்

ஆழாக்கு

முன் வழக்கில் இருந்த முகத்தலளவையான படியின் எட்டில் ஒரு பாகம்
மேற்சொன்ன அளவு குறிக்கப்பட்ட கலம்
அரைக்காற்படி

ஆள் அம்பு

பெருமளவில் இருக்கும் பணியாட்களும் ஊழியர்களும்

ஆள்காட்டிப் பறவை

மெலிந்து நீண்ட மஞ்சள் நிறக் கால்களையும் மஞ்சள் கருஞ்சிவப்பு நிறங்களில் அலகையும் உடைய(ஏதாவது சத்தம் கேட்டால் உடனே குரல் எழுப்பும் )பறவை

ஆள்காட்டி விரல்

சுட்டிக்காட்டப் பயன்படுத்தும் விரல்,சுட்டுவிரல்

ஆள்சேர்

(படைக்கு அல்லது தொழிற்சாலைக்கு) ஆட்களைத் தேர்ந்தெடுத்தல்
(பக்கத்துணையாக) ஆட்களைத் திரட்டுதல்

ஆள்சேர்ப்பு

(இராணுவம், காவல்துறை போன்றவற்றுக்கு) ஆட்களை வேலைக்குத் தேர்ந்தெடுக்கும் முறை

ஆள்பிணை

ஒருவரை பிணையில் விடுவிக்க மற்றொருவர் தரும் உத்திரவாதம்

ஆள் மாறாட்டம்

(மோசடி செய்யும் எண்ணத்தில்)வேறு ஒருவர் போல் நடித்தல்

ஆள்வள்ளிக் கிழங்கு

மரவள்ளிக்கிழங்கு

ஆள்விடு

ஒருவரை அழைத்து வர அல்லது ஒருவருக்கு செய்தி சொல்ல ஒரு நபரை அனுப்புதல்

ஆளாக்கு

(கோபம், வருத்தம்,துயரம் போன்ற விரும்பத் தகாத நிலைகளுக்கு ஒருவரை)உள்ளாக்குதல்,உட்படுத்துதல்

ஆளாகு

(கோபம், வருத்தம்,துயரம் போன்ற விரும்பத் தகாத நிலைகளுக்கு)உள்ளாதல்,உட்படுதல்

ஆளுநர்

மாநில நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்புக்குக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர்

ஆளுமை

1.ஒரு மனிதனின் தனிப்பட்ட குணத் தொகுப்பு 2.(சொத்தின் மேல் ஒருவருக்கு இருக்கும்)உரிமை,அதிகாரம்

ஆளுமைத் தேர்வு

(அரசுத் துறையில் அல்லது தனியார் நிறுவனத்தில்) நிர்வாகப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் ஆளுமையைப் பற்றி அறிந்துகொள்ள உளவியல் அடிப்படையில் நடத்தப்படும் தேர்வு

ஆளெடு

(பணிக்கு) ஆள்சேர்த்தல்

ஆளையாள்

1.ஒருவருக்கொருவர் 2.ஒவ்வொருவரும்

ஆளோடி

1.குறுக்குத் தடுப்பில்லாமல் வீட்டின் அகலத்திற்கு கூரை நீட்டப்பட்டுத் தளம் போடப்பட்ட,வீட்டின் முன் அல்லது பின் பகுதி 2.நடப்பதற்கு வசதியாகக் குளத்தின் மதில் சுவரை ஒட்டி உட்புறமாக அமைக்கப்பட்ட வழி

ஆற்றல்

திறமை
சக்தி