ஆ - வரிசை 16 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஆவல்

விருப்பம்
ஆசை

ஆவலாதி

(புலம்பி வெளிப்படுத்தும்) மனக்குறை

ஆவலாதி

அளவற்ற ஆசை

ஆவனசெய்

(அதிகார பூர்வமாக)தேவையானவற்றைச் செய்தல்

ஆவாரை

மருத்துவ குணம் கொண்ட இலைகளையும் கொத்துக்கொத்தாக மஞ்சள் நிறப் பூக்கலையும் கொண்ட ஒரு வகை குத்துச் செடி

ஆவி

வெப்பத்தின் காரணமாக காற்றில் கரைந்திருக்கும் புகை போன்ற நுண்ணிய திவலைகளின் தொகுப்பு
உடலில் உயிர் இருப்பதற்கு அடையாளமான மூச்சு
உருவமற்று இருப்பதாக நம்பப்படும் இறந்தவர்கள்

ஆவிபிடி

(மூலிகையை அல்லது கரையும் மருந்தை கொதிக்கும் நீரில் போட்டு அதன்)ஆவியை (மூக்கடைப்பு முதலியவை நீங்க) சுவாசித்தல்

ஆவியாதல்

குறிப்பிட்ட வெப்ப நிலையில் நீர் போன்ற திரவங்கள் ஆவியாக மாறும் நிலை

ஆவுடையார்

லிங்கத்தின் கீழ்ப் பகுதியைச் சுற்றியுள்ள மேடை போன்ற அமைப்பு

ஆவேசப்படு

(ஏமாற்றம், கோபம் போன்றவற்றால்)உணர்ச்சிவசப்படுதல்

ஆவேசம்

படபடப்பு
உணர்ச்சிப்பெருக்கு,உணர்ச்சி வசப்பட்ட நிலை

ஆழ்

முழுகு
மெய்மறந்த நிலைக்கு உட்படுதல்
ஆழம் அதிகமான

ஆழ்குழாய்க் கிணறு

ஆழ்துளைக் கிணறு,நிலத்தடி நீரை இயந்திரம் மூலமாக எடுப்பதற்கு ஆழமாகத் துழையிட்டு குழாய் பொருத்தி அமைக்கப்படும் கிணறு

ஆழ்த்து

உட்படுத்துதல்

ஆழ்துயில்

காதால் கேட்கவும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் கூடிய உறக்கத்தை ஒத்த நிலைக்கு ஒருவரை உட்படுத்தி அவர் ஆழ்மனத்தில் உள்ளதை அறிய முயலும் உளவியல் சிகிச்சை முறை

ஆழ்ந்த

மனமார்ந்த,தன்னை மறந்த,அடர்ந்த,செறிவான

ஆழ்ந்து

கூர்ந்து,ஆழமாக

ஆழ்மனம்

சுயநினைவுக்குப் புலப்படாமல் ஒருவரின் நடத்தையில், உணர்ச்சிகளில் வெளிப்படும் மனத்தின் பகுதி

ஆழ அகலம்

(ஒன்றைப் பற்றிய ) முழுமையான விவரம் அல்லது முழுமையான அறிவு

ஆழம்

(அளவீட்டின் துவக்கமாகக் கொள்ளும் ஒன்றின்)மேல் மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரையில் உள்ள அறிவு