ஆ - வரிசை 15 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஆலயம் | கோயில் |
ஆலவட்டம் | (பழங்காலத்தில்) கோயில் உற்சவத்தில் அல்லது அரச ஊர்வலத்தில் முன்னால் எடுத்துவரும் (துணி ,நறுமண வேர் அல்லது பனையோலை ஆகியவற்றால் ஆன) வட்ட வடிவப் பெரிய விசிறி |
ஆலா | தலை வயிறு ஆகியவை வெண்மையாகவும் இறக்கைகள் சாம்பல் நிறத்திலும் இருக்கும் கடற்கரைப் பகுதிகளில் வாழும் ஒரு வகைக் கழுகு |
ஆலாத்து | ஆரத்தியெடுத்தல் |
ஆலாபனை | ராகத்தின் வடிவத்தைப் பாடலோ தாளமோ இல்லாமல் விரிவாக வெளிப்படுத்தும் முறை |
ஆலாய்ப் பற | குறிப்பிட்ட ஒன்றை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்று துடித்தல் |
ஆலிங்கனம் | தழுவுதல் |
ஆலை | இயந்திரங்களைக் கொண்டு பொருள்களை (பெரும் அளவில்) தயாரிக்கும் கூடம் அல்லது மூலப் பொருள்களிலிருந்து ஒன்றைப் பெறும் பணி நடக்கும் கூடம், தொழிற்சாலை |
ஆலோசகர் | (குறிப்பிட்ட துறையில் வல்லுநராக இருந்து) ஆலோசனை கூறுபவர் |
ஆலோசனை | கலந்தாய்வு |
ஆலோசி | கலந்து பேசுதல் |
ஆலோலம் | (புஞ்சை தானியங்கள் விளைந்திருக்கும் நிலத்தில்) பறவைகளை விரட்ட வாயால் எழுப்பும் ஒலி |
ஆவக்காய் ஊறுகாய் | ஒருவகை மாங்காயை கொட்டையுடன் சேர்த்துக் கொத்தி, அரைத்த கடுகு,மிளகாய் முதலியவறோடு சேர்த்துத் தயாரிக்கும் ஊறுகாய் |
ஆவணக்காப்பகம் | பொது முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களைப் பாதுகாப்பதற்கென ஏற்படுத்தப்பட்ட இடம் |
ஆவணப் படம் | (பொழுதுபோக்குப் படமாக இல்லாமல்)தகவல் தரும் முறையில் எடுக்கப்படும் திரைப்படம் |
ஆவணப்படுத்து | தகவல்களை வரிசைப்படுத்துதல்,பட்டியலிடுதல் |
ஆவணம் | ஒரு தகவலை எழுத்தில் அல்லது பிற முறையில் பதிவு செய்திருக்கும் வடிவம்,பத்திரம் |
ஆவணி | ஐந்தாம் தமிழ் மாதத்தின் பெயர் |
ஆவர்த்தன அட்டவணை | தனிம வரிசை அட்டவணை , அணு எண்ணை அடிப்படையாகக் கொண்டு அனைத்துத் தனிமங்களையும் வகைப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள அட்டவணை |
ஆவர்த்தனம் | (பாடல் இசைக்கப்படும்போது, அது அமைக்கப்பட்டிருக்கும்) தாளத்தின் ஒரு முழுச்சுற்று |