ஆ - வரிசை 14 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஆரம்பம் | தொடக்கம் |
ஆரம்பி | தொடங்குதல் |
ஆரவாரம் | பலர் கூடியிருக்கும் இடத்திலிருந்து எழும் பெரும் உற்சாகத்துடன் கூடிய சத்தம் |
ஆரவாரி | (அலை)பெரும் ஓசையிடுதல் |
ஆராதனை | (மலரிடுதல் ;தீபம் காட்டுதல் போன்றவற்றால் தெய்வத்திற்குச் செய்யும்) வழிபாடு |
ஆராதி | வழிபடுதல் |
ஆராய் | விசாரித்தல் |
ஆராய்ச்சி | ஒரு துறையில் புதிய உண்மைகளைக் கண்டறியச் செய்யப்படும் சோதனை, ஆய்வு |
ஆராய்ச்சி | காவலர் தலைவன் |
ஆராய்ச்சி மணி | (முற்காலத்தில்)குடிமக்கள் தம் குறையைத் தெரிவிக்க மன்னனின் கவனத்தை ஈர்ப்பதற்காக அரண்மனைக்கு வெளியே தொங்கவிடப்பட்டிருந்த மணி |
ஆரால் | கூரிய மூக்கையும் முதுகுப் பகுதியில் முட்களையும் கொண்ட பாம்புபோல் தோற்றமளிக்கும்(உணவாகும்) நன்னீர் மீன் |
ஆரியம் | ஆரிய நாடு |
ஆருடம் | ஒருவர் மனத்தில் நினைத்து வைத்திருக்கும் காரியம் எவ்வாறு முடியும் என்பதைச் சில குறிகளால் அறிந்து கூறும் ஒரு வகை சோதிடம் |
ஆருயிர் | மிகவும் அருமையான,மிகுந்த நேசத்துக்குரிய |
ஆரோக்கியம் | நலம்(உடல்நலம்) |
ஆரோகணம் | ஒரு ராகத்தின் ஸ்வரங்களை படிப்படியாக கீழிருந்து மேலாக ஒலி அலவில் உயர்த்தும் முறை |
ஆல் | ஆலமரம் |
ஆல்பகோடாப் பழம் | புளிப்பும் லேசான இனிப்பும் கலந்த சுவையை உடைய பழுப்பு நிற சதைப் பகுதியினுள்பெரிய கொட்டையைக் கொண்ட ஒரு வகைச் சிறிய பழம் |
ஆலக்கரண்டி | (நெருப்பில் காட்டித் தாளிக்கப் பயன்படுத்தும்) நீண்ட கைப்பிடி உடைய இரும்புக் கரண்டி |
ஆலமரம் | உயர்ந்து வளர்ந்து கிளைகள் பரப்பி விழுதுகள் விட்டு நீண்ட காலம் இருக்கக் கூடிய பெரிய மரம் |