ஆ - வரிசை 13 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஆயுள் உறுப்பினர் | தன்னுடைய ஆயுட்காலம் வரையில் ஒரு அமைப்பில் அங்கத்தினராக ஏற்கப்பட்டவர் |
ஆயுள் காப்பீடு | குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஒரு நிறுவனத்துக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டி,கட்டுபவர் குறிப்பிட்ட வயதை அடைந்ததும் தொகையைப் பெறும் அல்லது அந்த வயதை அடைவதற்கு முன்னர் அவர் இறந்துவிட்டால் அவரது வாரிசுகள் அத்தொகையைப் பெறு ஒரு ஏற்பாடு |
ஆயுள் கைதி | ஆயுள் தண்டனை பெற்ற கைதி |
ஆயுள்சந்தா | ஒருவர் தன் ஆயுட்காலம் வரையில் பத்திரிக்கை முதலியவற்றைப் பெறுவதற்கு அல்லது ஒரு அமைப்பில் உறுப்பினராக இருப்பதற்கு ஒரே தவனையில் கட்டும் தொகை |
ஆயுள் தண்டனை | கொலை ,தேசத்துரோகம் போன்ற குற்றங்களைச் செய்தவர் தன் ஆயுள் முழுவதும் சிறையில் கழிக்குமாறு தரப்படும் தண்டனை |
ஆயுள்ரேகை | (கைரேகை சோதிடத்தில்) ஒருவரின் ஆயுட்காலத்தைக் காட்டுவதாக இருக்கும் ரேகை |
ஆர்ந்த | 'நிறைந்த' என்ற பொருளில் ஒரு பெயர்ச்சொல்லை பெயரடையாக மாற்றும் இடைச்சொல் |
ஆர்ப்பரி | (கடல், அலை) ஓசை எழுப்புதல் |
ஆர்ப்பாட்டம் | (ஒரு கோரிக்கையை வலியுறுத்தி அல்லது ஒன்றை எதிர்த்து) பலர் கூடி எழுப்பும் கோசங்களுடன் கூடிய வெற்றுக் கூச்சல் |
ஆர்ப்பு | (கதவு,நிலை,நாற்காலி போன்றவற்றைப் பொருத்தப் பயன்படும் ஆணிபோல் செதுக்கப்பட்ட சிறிய மரத்துண்டு |
ஆர்வக் கோளாறு | (ஒருவர் ஒரு விசயத்தில் காட்டும்) எதிர்பாராத விளைவுகளை உண்டாக்கும், அளவுக்கு மீறிய ஆர்வம் |
ஆர்வலர் | (குறிப்பிட்ட துறையில்) ஈடுபாடு உடையவர் |
ஆரக்கால் | கட்டைவண்டிச் சக்கரத்தின் குறுக்குக் கால் |
ஆரத்தி | (மணமக்கள் ,பெரியவர்கள் முதலியோரை வரவேற்கும் விதமாகவும் திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகளின் இறுதியிலும் வழிபாட்டின் முடிவிலும் மங்கலத்தின் அறிகுறியாக )தாம்பாளத்தில் மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்ததால் சிவப்பு நிறத்தில் இருக்கும் நீர் |
ஆரத்தியெடு | ஆரத்தி நீர் நிறைந்த தட்டை ஒருவருக்கு முன்பு சுற்றுதல் |
ஆரம் | மாலை |
ஆரம்பக் கல்வி | சிறுவர்களுக்கு அளிக்கப்படும் ஐந்தாம் வகுப்பு வரையிலான கல்வி |
ஆரம்பச் சுகாதார நிலையம் | கிராமப் புறத்தில் அடிப்படை மருத்துவ வசதிகளை மட்டுமே கொண்டிருக்கும் அரசு மருத்துவமனை |
ஆரம்ப சூரத்தனம் | (ஒரு செயலின்) ஆரம்பத்தில் மட்டும் காட்டப்படும் உற்சாகம் |
ஆரம்பப் பள்ளி | தொடக்கப் பள்ளி,ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை உள்ள பள்ளிக்கூடம் |