ஆ - வரிசை 12 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஆயத்தப்படுத்து

உரிய ஏற்பாடுகளைச் செய்தல்

ஆயத்தம்

திட்டமிட்ட ஏற்பாடு
முன்னேற்பாடு

ஆயத்தீர்வை

தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருள்களுக்கு உள்நாட்டில் விதிக்கப்படும் தீர்வை

ஆயம்

ஆயரின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதி,மறைமாவட்டம்
குத்தகை
வருவாய்
சுங்கவரி
சூதாடு கருவி
சூதாட்டம்
இரகசியம்
ஒரு பெருமாட்டியின் தோழியர் கூட்டம்
மேகம்
வருத்தம்
துன்பம்
பசுத்திரள்
நண்பர்கள், சுற்றம்
பண்ணை - பெண்கள் கூட்டம்
ஆயம் - தோழிகள் கூட்டம்
திரள் - ஆண்கள் கூட்டம்
பாங்கர் - தோழர் கூட்டம்

ஆயம்

சந்தை முதலியவற்றில் பொருட்களை வைத்து விற்பவர்களிடம் அறவிடும் குத்தகை பணம்

ஆயர்

கத்தோலிக்க திருச்சபை அல்லது அதையொத்த திருச்சபைகளில் மறை மாவட்டம் ஒன்றுக்கு பொறுப்பாக இருக்கும் சமயத் தலைவர். அருட் தந்தையருக்கும் மேலான நிலையாகும்.
யாதவ இனத்தவரை இடையர், ஆயர் என்று அழைப்பார்கள்

ஆயா

வயது முதிர்ந்த பெண்மணியை மரியாதையுடன் அழைக்கப் பயன்படுத்தும் சொல்

ஆயாசம்

களைப்பு
சோர்வு

ஆயிரத்தில் ஒருவர்

பல நல்ல குணங்களும்,தன்மைகளும் உடைய அரிய மனிதர்

ஆயிரம்

நூறின் பத்து மடங்கு
1000

ஆயில்யம்

27 நட்சத்திரங்களில் ஒன்பதாவது

ஆயின்

இரண்டு கூற்றுக்களில் மாறாகவோ விலக்காகவோ இருப்பதை முதல் கூற்றோடு தொடர்புபடுத்தும் ஒரு இடைச் சொல்,ஆனால்
இரண்டு கூற்றுகளில் முதல் கூற்று நிபந்தனையாக அமையும்போது பயன்படுத்தப்பட்டு இரண்டாவது கூற்றுடன் முதல் கூற்றைத் தொடர்பு படுத்தும் இடைச் சொல்,

ஆயினும்

'ஆனாலும்' என்ற பொருளில் இரட்டை வாக்கியங்களை இணைக்கும் ஒரு இடைச்சொல்
ஆனாலும்.
ஆவது. பத்தாயினும் எட்டாயினுங் கொடு.
உம்மைப்பொருளில் வரும் எண்ணிடைச்சொல். (சிலப்.
14, உரை.)

ஆயுசு

ஆயுள்,உயிர் வாழும் காலம்,ஆயுட்காலம்

ஆயுதக்குழு

ஆயுதம் ஏந்திய தீவிரவாதக் குழு

ஆயுத படை

(கலவரத்தை அடக்குவது போன்ற பணிகளுக்காக)எப்போதும் தயார் நிலையில் இருக்கும் காவல் துறையின் படை

ஆயுத பூசை

நவராத்திரிப் பண்டிகையில் சரஸ்வதி பூசை அன்று அவரவர் தம் தொழிலில் பயன்படுத்தும் கருவிகளுக்குச் செய்யும் பூசை

ஆயுதம்

போர் கருவி

ஆயுர்வேதம்

பெரும்பாலும் மூலிகைகளைக் கொண்டு நோய்க்கு சிகிச்சை அளிக்கும் இந்திய மருத்துவ முறை

ஆயுள்

வாழ்நாள்