ஆ - வரிசை 11 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஆமவடை

வெங்காயம் போடாத மசால் வடை

ஆமாம்

ஆம், உண்டு
ஒருசம்மதக்குறிச்சொல்

ஆமானவன்

திறமை வாய்ந்தவன்

ஆமானவன்

வல்லவன், சரியானவன்

ஆமை

குஞ்சு பொரிப்பதற்காக தன் முட்டைகளை நிலத்தில் புதைக்கும் ,கடினமான ஓட்டைக் கொண்டிருக்கும்(நிலம்,நன்னீர்,கடல் ஆகியவற்றில் வசிக்கும் இனங்களை உள்ளடக்கிய) ஊர்வன இனத்தைச் சேர்ந்த பிராணிகளைக் குறிக்கும் பொதுப் பெயர்
கூர்மம்

ஆமோதி

ஒப்புக்கொள்ளுதல்
ஏற்றுக்கொள்ளுதல்

ஆய்

கிள்ளிக் களைதல் /நறுக்கி எடுத்தல்
ஆராய்தல்
அழகு
நுண்மை
சிறுமை
வருத்தம்
இடையர் குலம்
கடையெழு வள்ளல்களில் ஒருவன்
ஏவலொருமை விகுதி (எ.கா - உண்ணாய்)
முன்னிலை ஒருமை விகுதி (எ.கா - நடந்தாய்)
ஆராய்ச்சி செய்
தெரிந்த்தெடு
பிரித்தெடு
ஆலோசனை செய்
கொய்தல் செய்
குத்துதல் செய்
நுணுக்கமாகு
குறைவாகு
அழகாகு
வருந்து
ஆய்தல்

ஆய்

பறி, முத்தம்

ஆய்க்கினை

நச்சரிப்பு

ஆய்க்கினை

நச்சரிப்பு, ஒரு செயலினை செய்யுமாறு அல்லது செய்யாமல் விடுமாறு மற்றவருக்கு சலிப்பினை தரத்தக்க வகையில் அழுத்தம் கொடுத்தல்

ஆய்தம்

ஃ என்ற அமைப்பைக் கொண்ட வரி வடிவம்

ஆய்வகம்

சோதனைக்கூடம்

ஆய்வடங்கல்

குறிப்பிட்ட பொருளின் அடிப்படையில் ஆய்வுக் கட்டுரைகளை நூல்களை வரிசைப் படுத்தித் தரும் பட்டியல்

ஆய்வாளர்

1. ஒரு குறிப்பிட்ட துறையில் அல்லது குறிப்பிட்ட தலைப்பில் ஆய்வு செய்பவர், ஆராய்ச்சி மாணவர் 2.(காவல்துறை சுங்கத்துறை போன்றவற்றில்)இடைநிலை அதிகாரி

ஆய்வு

ஆரய்ச்சி
பரிசீலனை

ஆய்வுக்கூடம்

(அறிவியல்துறை முதலியவற்றில் ) சோதனைகளுக்குத் தேவையான கருவிகள் இருக்கும் இடம்

ஆய்வேடு

(பெரும்பாலும் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டம் பெறுவதற்கு) ஒரு குறிப்பிட்ட துறையில் செய்த ஆராய்ச்சியின் முடிவுகளை தொகுத்து எழுதப்படும் கட்டுரை

ஆயக்கட்டு

ஒரு கிராமத்தின் நில அளவுக்கணக்கு ஓர் ஏரி நீர்ப்பாசன நிலப்பரப்பு (குளப்புரவு)
பொய்வாக்குமூலம்

ஆயத்த ஆடை

தேவையான அளவுகளில் தைக்கப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கும் ஆடை

ஆயத்தப்படு

தயார் செய்தல்