ஆ - வரிசை 10 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஆதிக்கம்

வல்லாண்மை
ஆதிக்கியம்

ஆதிதிராவிடர்

அட்டவணை இனத்தைச் சார்ந்தவர்,தலித்

ஆதிபத்தியம்

அதிகாரத் தலைமை

ஆதிமனிதன்

கல் ஆயுதங்களின் பயன்பாட்டையும், தீயின் பயன்பாட்டையும் அறிந்ந்திருந்த ஏறத்தாழ 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன்

ஆதியோடந்தமாக

ஆரம்பம் முதல் முடிவு வரை,முழுவதுமாக

ஆதிவாசி

பழங்குடி இனத்தவர்

ஆதினம்

ஆதீனம்,சைவத்தைப் பரப்புவதற்கு சைவத் துறவிகளால் நிர்வகிக்கப்படும் அமைப்பு
சொந்த உரிமை
சைவமடம்

ஆதுரம்

பரிவும் அக்கறையும் கலந்த உணர்ச்சி
அவா
நோய்

ஆந்தை

இரவில் இரை தேடும் பெரிய கண்களையும் தட்டையான முகத்தையும் கொண்ட பறவை

ஆப்பச்சோடா

சமையல் சோடா

ஆப்பம்

நடுப்பகுதி தடிமனாகவும்,மென்மையாகவும் ஓரம் மெல்லியதாகவும் இருக்கும் தோசை போன்ற உணவுப் பண்டம்

ஆப்பு

(மரம் முதலியவற்றை பிளக்க அதன் வெடிப்பில் வைத்து) அடித்து உள் இறக்கப்படும் கூம்பு வடிவ மரக்கட்டை அல்லது இரும்புத் துண்டு

ஆப்பைக்கூடு

(கரண்டி ,மத்தை போன்றவற்றை செருகிவைக்க) தொங்க விடப்பட்டிருக்கும் துளைகள் கொண்ட சமையலறைச் சாதனம்

ஆபத்து

தீங்கு
கேடு
வில்லங்கம்

ஆபரணத் தங்கம்

நகை செய்ய ஏற்றவாறு செப்புக் கலந்த தங்கம்

ஆபரணம்

அணிகலன்

ஆபாசம்

கொச்சை
அசுத்தம்
அழுக்கு
போலி நியாயம்
முறைத்தவறு
அஞ்சத்தக்க வடிவம்
பிரதி பிம்பம்
பொய்த்தோற்றம்
கீழ்த்தரமான முறையில் பாலுணர்வைத் தூண்டக்கூடியது

ஆம்

உண்டு
சம்மதங்காட்டுஞ்சொல்
கேள்விப்பட்டதைக் குறிக்கும் சொல். ஓர் இராக்கதன் இருந்தானாம்.
இகழ்ச்சிக்குறிப்பு ஈத்தவை கொள்வானாம் (கலித். 84, 18).
அனுமதி குறிக்குஞ் சொல்; அவன் போகலாம்
தகுதி குறிக்குஞ் சொல்; அவரைப் பெரியவராக வணங்கலாம்
ஊக்கத்தைக் குறிக்குஞ் சொல். இன்றைக்கு மழை பெய்யலாம்
ஆவது. இரண்டாம் வேற்றுமை
சாத்தியம் இருத்தல்
அனுமதித்தல்
ஒத்துக் கொள்ளுதல்
தகுதி முதலியன குறிக்கும் சொல்

ஆமணக்கு

விளக்கெண்ணெய் எடுக்கப் பயன்படும் கரும் பழுப்பு நிற்ஹ விடிஅ / மேற்குறிப்பிட்ட விதையைத் தரும் ஐந்து பிரிவாகப் பிரிந்த இலைகளைக் கொண்ட செடி
கொட்டைமுத்துச் செடி

ஆமத்துறு

பௌத்த துறவி,பிக்கு