ஆ - வரிசை 1 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஆள் | நபர், வயது வந்த ஆண்(ஆண்மகன்) |
ஆளுகை | (அரசரின்)ஆட்சி |
ஆ | ஒரு வாக்கியத்தில் பெயரடை தவிர்த்த சொல்லோடு இணைக்கப்படும்போது அந்தச் சொல்லுக்கு வினாப் பொருளைத் தரும் இடைச்சொல் |
ஆ | பசு |
ஆக்கபூர்வம் | பயன் தரும் விதத்தில்,பயன் தரும்படியான,உருப்படியான |
ஆக்கம் | நன்மை தரும் முறையிலானது |
ஆக்கர் | (சுவர், மரம், தகடு போன்றவற்றில்) துளையிடப் பயன்படும் கருவி |
ஆக்கவினை | ஒரு செயலைச் செய்வதற்கு மற்றொருவர் அல்லது மற்றொன்று காரணமாக இருப்பதைத் தெரிவிக்க பயன்படுத்தும் வினை |
ஆக்காண்டி | ஆள்காட்டிப் பறவை |
ஆக்கியோர் | (கவிதை இலக்கணம் முதலியவற்றை)இயற்றியவர்,ஆசிரியர் |
ஆக்கிரமி | கவர்ந்துகொள்ளுதல் |
ஆக்கிரமிப்பு | 1.(நாட்டைக் கைப்பற்றும் எண்ணம் கொண்ட)போர் நடவடிக்கை 2.உரிமை இல்லாத இடங்களில் அமைக்கப்படும் வீடு ,கடை முதலியவை 3.ஆதிக்கம் |
ஆக்கு | படைத்தல் |
ஆக்கும் | ஒரு கூற்றில் பெயரடை தவிர்ந்த பகுதியை வலியுறுத்த அந்தப் பகுதியை வலியுறுத்த அந்தப் பகுதியைக் குறிக்கும் சொல்லோடு சேர்க்கப்படும் இடைச்சொல் |
ஆக்கை | (யாக்கை) உடம்பு |
ஆக்சிகரணம் | ஒரு பொருள் பிராணவாயுவுடன் இணையும் வேதிவிணை |
ஆக்ஞை | கட்டளை |
ஆக்ரோஷம் | ஆவேசம் |
ஆக | ஒரு பெயர்ச்சொல்லை வினையடையாக்கும் இடைச்சொல் |
ஆக | மட்டும் |