அ - வரிசை 97 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அங்கணாளர்

சிவன்.

அங்கதச்செய்யுள்

வசைக்கவி.

அங்கதப்பாட்டு

அங்கதச்செய்யுள்.

அங்கத்தி

A term of respect used in addressing pandarams, which answers to தாங்கள்.

அங்கதாரி

சிவன், சீவன், தேகம்.

அங்கபடி

அங்கவடி, கவணை,குதிரையங்கபடி.

அங்கபாலிகை

கட்டித்தழுவுதல்.

அங்கப்பூ

மகன்.

அங்கம்பயந்தோன்

அருக்கடவுள்.

அங்கரக்கா

மெய்ச்சட்டை.

அங்கரட்சணி

யுத்தகவசம்.

அங்கரட்சா

அங்கரக்கா.

அங்கரவல்லி

குறிஞ்சா.

அங்கரூகம்

உரோமம்.

அங்கலக்கணம்

சரீர அழகு, சாமுத்திரிகாலக்கணம்.

அங்கவடி

அங்கபடி.

அங்கவிட்சேபம்

அபிநயம்.

அங்கவியல்

இராசரீகமுறைமை.

அங்கவீனன்

குரூபி.

அங்களி

கற்றாழை.