அ - வரிசை 96 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அக்கினிவல்லபம் | குங்கிலியம், கீல். |
அக்கினிவிசர்ப்பம் | விரணக்கொதி. |
அக்கினிவீசம் | பொன். |
அக்கினிவீரியம் | அக்கினியின்வீரம். |
அக்குமணி | சங்குமணி. |
அககுரு | விரல். |
அககுருக்கி | சயரோகம். |
அக்குளு | அக்குளுத்தல். |
அக்கோகிணி | அக்குரோணி. |
அக்கோணி | அக்குரோணி. |
அக்கௌகிணி | ஆக்குரோணி. |
அங்கசங்கம் | புணர்ச்சி. |
அங்கசவேள் | மன்மதன். |
அங்கசாதனம் | ஒருகுறி. |
அங்கசாரி | சிவன். |
அங்கசிவயோகம் | அஷ்டாங்கசிவயோகம். |
அங்கசை | மகள். |
அங்கச்சோமன் | இரண்டு தூண்களுக்கு நடுவிலுள்ள இடம், உள்ளறை,கடுமரம்,சலதாரை,சேறு,பத்துமுழத்தளவு,பரப்பு, பொரிகாரம், முற்றம், வெண்காரம், மதகு. |
அங்கச்சோமன் | இரண்டு தூண்களுக்கு நடுவிலுள்ள இடம், உள்ளறை,கடுமரம்,சலதாரை,சேறு,பத்துமுழத்தளவு,பரப்பு, பொரிகாரம், முற்றம், வெண்காரம், மதகு |
அங்கணர் | சிவன். |