அ - வரிசை 94 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அக்கினிக்கர்ப்பம் | அக்கினிக்கருப்பம். |
அக்கினிசகன் | காற்று |
அக்கினிசகாயன் | காற்று. |
அக்கினிசயனம் | ஓமாக்கினிவளர்த்தல். |
அக்கினிசாந்தி | ஓமம். |
அக்கினிசாலம் | ஒரு பூடு, நெருப்புச் சாலம். |
அக்கினிசிகம் | அம்பு,வானம்,விளக்கு |
அக்கினிச்சிலம் | கார்த்திகைக்கிழங்கு |
அக்கினிச்சிவம் | குப்பைமேனி. |
அக்கினிச்சுவாலை | தீக்கொழுந்து, ஒரு பூண்டு. |
அக்கினிதாரணம் | ஓமாக்கினி வளர்த்தல். |
அக்கினிதேவன் | அக்கினிதேவதை |
அக்கினித்தம்பன் | சிவன். |
அக்கினித்திராவகம் | ஒருதிராவகநீர். |
அக்கினித்திரேதை | திரியாக்கினி. |
அக்கினித்தூண் | தீப்பிழம்பு. |
அக்கினிநாள் | கொடியநாள். |
அக்கினிபம் | பொன். |
அக்கினிபரிச்சதம் | ஓமோபகரணம். |
அக்கினிபரித்தியாகம் | அக்கினியிலேஓமஞ்செய்யாதொழிதல். |