அ - வரிசை 92 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அகூபாரம் | ஆமை, கடல், கன்மலை. |
அகையகாதுரம் | திருதசேகரம். |
அகோடம் | கமுகமரம். |
அகோரதந்திரம் | உபாகமங்களில் ஒன்று. |
அக்கண்டே | அககாளே. |
அக்கதயோனி | கன்னி. |
அக்கபாடகன் | நியாயாதிபதி. |
அக்கப்பிரம் | மாமரம். |
அக்கமம் | பொறாமை. |
அக்கமாலிகாபரணன் | கபாலமூர்த்தி. |
அக்கமுன்றி | கண். |
அக்கரத்தான் | தான்றி. |
அக்கரப்பிரஞ்சம் | எழுத்து மாறாட்டம். |
அக்கரம்மா | வெள்ளெருக்கு. |
அக்கராந்தம் | எழுத்தொலி. |
அக்கருத்திரம் | உருத்திராக்ஷக்கோவை. |
அக்கவாடம் | சூதாடுமிடம், மற்களறி. |
அக்களிப்பு | மனமகிழ்ச்சி. |
அக்காதேவி | மூதேவி |
அக்காத்தான் | தான்றிமரம் |