அ - வரிசை 91 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அகிருதித்துவம் | அந்தக்கேடு. |
அகிலகாரணன் | உலோக காரணன்,பரசிவன். |
அகிலகாரணி | உலகமாதா, பரசிவை. |
அகிலநாயகன் | சிவன், கடவுள். |
அகிலபோகம் | சகலவனுபவம், உலகவாழ்வு. |
அகிலலோகம் | எல்லாவுலகம். |
அகிலாங்கம் | சதுரவடிவம். |
அகிவைரி | கருடன், மயில். |
அகிற்குடம் | அகிற்புகைக்கும்பம். |
அகிற்குறடு | அகிற்கட்டை. |
அகீசன் | ஆதிசேடன், அகிபதி. |
அகீனன் | பெரியோன். |
அகுணதை | அகுணத்துவம். |
அகுணத்துவம் | குணமின்மை. |
அகுதி | கதியிலி |
அகுருத்துவம் | கனமின்மை. |
அகுலீனம் | குலவீனம் |
அகுலீனன் | இழிகுலத்தவன். |
அகுவைக்கட்டி | அரையாப்புக்கட்டி |
அகூடகந்தம் | பெருங்காயம். |