அ - வரிசை 90 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அகவற்சுரிதகம் | ஆசிரியச் சுரிதகம். |
அகவுதல் | ஒலித்தல் |
அகழெலி | அகழான். |
அகளங்கமூர்த்தி | கடவுள், புத்தன். |
அகன்னம் | செவிடு |
அகாகம் | ஆசௌசதினம். |
அகாசரம் | அறியாமை. |
அகாண்டபாதம் | காலமல்லாதகாலசம்பவம். |
அகாதத்துவம் | ஆழம். |
அகாதப்படுஞ்சமயம் | பிரமாத மாகுஞ்சமயம். |
அகாதன் | வஞ்சகன். |
அகாதிதம் | பட்சித்தல். |
அகாருண்ணியம் | அன்பின்மை. |
அகாலமிருத்து | அநியாயமரணம். |
அகிகாந்தம் | காற்று. |
அகிஞ்சகன் | ஜீவ இம்சை செய்யாதவன். |
அகிதமிட்டிரன் | ஒரு விராக்கதன். |
அகிதர் | பகைவர். |
அகிபுக்கு | கருடன், கீரி, மயில். |
அகிருதகம் | செய்யப்படாதது. |