அ - வரிசை 9 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அசகாய | மிகுந்த முயற்சியும் திறமையும் தேவைப்படுகிற,எளிதில் செய்ய முடியாத |
அசகாய சூரன் | எளிதில் செய்ய முடியாததைச் செய்யும் திறமையுள்ளவன் |
அசங்கு | லேசாக அசைத்தல் |
அசட்டுத்தனம் | சூழலுக்கு ஏற்றபடி நடந்து கொள்ளத் தெரியாத தன்மை |
அசட்டுப்பிசட்டு-என்று | முட்டாள்தனமாக,அபத்தமாக |
அசட்டை | புறக்கணிப்பு,அலட்சியம்,கவனக்குறைவு |
அசடு | சூழலுக்கு ஏற்றபடி நடந்து கொள்ளத் தெரியாத தன்மை |
அசடுதட்டு | அசடுவழிதல் |
அசடுவழி | முட்டாள்தனமாக தோன்றும் விதத்தில் நடந்து கொள்ளுதல் |
அசண்டை | (இலங்) அசட்டை,அலட்சியம் |
அசத்தல் | பிரம்மிக்க வைக்கும் தன்மை |
அசத்து | மலைக்க வைத்தல்,திணறடித்தல் |
அசதி | களைப்பு |
அசந்தர்ப்பம் | எதிர்பாராத பிரச்சினை |
அசப்பில் | (இருவரின் தோற்றத்தை ஒப்பிடும்போது) மேலோட்டமான பார்வையில் |
அசம்பாவிதம் | முரணிகழ்வு |
அசமந்தம் | சுறுசுறுப்பும் உற்சாகமும் இல்லாத தன்மை |
அசர் | வியப்படைதல் |
அசரீரி | விண்னொலி |
அசல் | போலி அல்லாதது,உண்மையானது, சுத்தமானது |